பாகிஸ்தான் டி20 தொடரை தெறிக்க விட்ட ஷேன் வாட்சன்.. அடுத்து ஐபிஎல் தான்.. சிஎஸ்கே ரசிகர்கள் குஷி!!
Recommended Video

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன், சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்து இரண்டு விருதுகளை வென்றுள்ளார்.
பிஎஸ்எல் 2019 தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் விருது மற்றும் சிறந்த வீரர் விருது, ஆகியவற்றை வென்று அசத்தியுள்ளார்.

சூப்பர் பேட்டிங்
பிஎஸ்எல் 2019 தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஆடிய ஷேன் வாட்சன், 12 போட்டிகளில் 430 ரன்கள் அடித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 43 ஆகும். இவரது ஸ்ட்ரைக் ரேட் 143.81.

அதிக சிக்ஸ்
இந்த தொடரில் 4 அரைசதம் அடித்து அசத்திய வாட்சன், அதிக ஃபோர் மற்றும் சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 12 போட்டிகளில் 43 ஃபோர் மற்றும் 22 சிக்ஸ் அடித்து இருக்கிறார் வாட்சன். பிஎஸ்எல் 2௦19 தொடரை வாட்சன் பங்கேற்ற அணி தான் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ஐபிஎல்
தற்போது பிஎஸ்எல் தொடர் முடிந்த நிலையில், வாட்சன் அடுத்து ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடவுள்ளார். தற்போது வாட்சன் உச்சகட்ட பார்மில் இருப்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். ஐபிஎல் தொடரிலும் அதே பார்மில் கலக்க வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இறுதிப் போட்டி சதம்
கடந்த ஐபிஎல் தொடரிலும் ஷேன் வாட்சன் அட்டகாசமான பார்மில் இருந்தார். 2018 ஐபிஎல் தொடரில் 2 சதம் அடித்த ஒரே வீரர் இவர் தான். அதிலும் இறுதிப் போட்டியில் சதம் அடித்து சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார் வாட்சன்.

ரன் வேட்டை
கடந்த சீசனில் 15 போட்டிகளில் ஆடி 555 ரன்கள் குவித்திருந்தார். அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஐந்தாம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணியில் இந்த ஆண்டும் பெரிய அளவில் தன் ரன் வேட்டையை நடத்துவாரா வாட்சன்?


Click it and Unblock the Notifications