Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாட்சன் சதம்.. ஒரு சாதனையும் கூட!

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான 3வது டுவென்டி 20 போட்டியில் இன்று ஆஸ்திரேலிய கேப்டன் வாட்சன் போட்ட அதிரடி சதமானது, பல சாதனைகளுக்கும் வித்திட்டுள்ளது.

71 பந்துகளில்124 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் வாட்சன். காயமடைந்த ஆரோன் பின்ச்சுக்குப் பதில் இன்று கேப்டனாக செயல்பட்ட வாட்சன் பேட்டிங்கில் பேயாட்டம் போட்டார்.

சிட்னி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இந்தியப் பந்து வீச்சை சட்னியாக்கி விட்டார் வாட்சன். மேலும் அவரது அபாரமான பேட்டிங்காகவும் இது அமைந்தது.

கோஹ்லி செய்த தவறால்

கோஹ்லி செய்த தவறால்

உண்மையில் 50 ரன்களில் இருந்தபோது வாட்சன் கொடுத்த அழகான கேட்ச்சை கோஹ்லி தவறவிட்டு விட்டார். அதன் பிறகு வாட்சனின் அதிரடி வேகமடைந்தது.

முதல் சதம்

முதல் சதம்

இதுதான் வாட்சனுக்கு டுவென்டி 20 போட்டிகளில் முதல் சதமாகும். இதற்கு முன்பு இவர் அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்திருந்தார்.

10 பவுண்டரி..6 சிக்ஸர்கள்

10 பவுண்டரி..6 சிக்ஸர்கள்

தனது ஸ்கோரில் 10 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் விளாசியிருந்தார் வாட்சன். அவரது ஸ்டிரைக் ரேட் 174.64 ஆக இருந்தது.

கேப்டனாக சாதனை

கேப்டனாக சாதனை

இதுவரை ஒரு கேப்டனாக, டுவென்டி 20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவின் பாப் டூபிளசிஸ் போட்ட 119 ரன்களே சாதனையாக இருந்தது. அதை இன்று வாட்சன் முறியடித்தார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் சதம்

இந்தியாவுக்கு எதிரான முதல் சதம்

மேலும் இந்தியாவுக்கு எதிராக டுவென்டி 20 போட்டிகளில் போடப்பட்ட முதல் சதம் இதுதான். மேலும், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரராகவும் வாட்சன் உயர்ந்தார்.

ஏலத்திற்கு முன்பு செம ஆட்டம்

ஏலத்திற்கு முன்பு செம ஆட்டம்

அடுத்த வாரம் ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது. இதில் ஷான் வாட்சனின் அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அவர் அதிரடியாக ஆடியுள்ளது அவருக்கான கிராக்கியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, January 31, 2016, 16:21 [IST]
Other articles published on Jan 31, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+