Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பையை வெல்லப் போவது யார்? 2 அணிகளுக்கு வாய்ப்பு.. வாட்சன் பளீச்

ராய்ப்பூர் : ஐசிசி t20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது குறித்து நட்சத்திர வீரர் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐசிசி t20 உலக கோப்பை போட்டி வரும் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.

இதற்காக பல்வேறு அணிகளும் இறுதிக்கட்ட தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதிக் கட்ட பயிற்சி

இறுதிக் கட்ட பயிற்சி

குறிப்பாக இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவுடன் டி20 தொடரில் விளையாடுகிறது பாகிஸ்தானை பொறுத்தவரை இங்கிலாந்துடன் டி20 தொடரும் , அதன் பிறகு நியூசிலாந்தில் முத்தரப்பட்ட டி20 தொடர்களும் விளையாடுகிறது.இங்கிலாந்து அணி பாகிஸ்தான் தொடர் முடிந்தவுடன் நேராக ஆஸ்திரேலியா சென்று மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

வாட்சன் கருத்து

வாட்சன் கருத்து

இதேபோன்று மேற்கிந்திய தீவுகள் அணியும் ஆஸ்திரேலியாவுக்கு சென்று டி20 போட்டியில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாட்சனிடம் எந்த அணிக்கு உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கேள்வி கேட்கப்பட்டது. இதுக்கு பதில் அளித்த அவர் ஆஸ்திரேலியா அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் அந்த அணிக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கருத்து தெரிவித்தார்.

ஆஸி.க்கு சாதகம்

ஆஸி.க்கு சாதகம்

ஆஸ்திரேலிய அணி கடந்து சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதாக வாட்சன் குறிப்பிட்டார்.மற்ற ஆடுகளங்களை விட ஆஸ்திரேலிய ஆடுகளம் சற்று வித்தியாசமாக இருப்பதால் மற்ற அணிகளுக்கு அதற்கு ஏற்ற போல் தங்களது ஆட்டத்தை மாற்றிக்கொள்ள சில காலம் ஆகும் என்றும் அவர் கூறினார். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு தான் கூடுதல் சாதகம் என்று வாட்சன் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு வாய்ப்பு

இந்தியாவுக்கு வாய்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக இந்திய அணி டி20 உலக கோப்பையும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். வரும் ஆறாம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி அங்கு பெர்த் நகரில் முகாம் பட்டு பயிற்சியை தொடங்குகிறது. இந்திய அணி வரும் 17ம் தேதி ஆஸ்திரேலியா உடனும் 19ஆம் தேதி நியூசிலாந்துடனும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க்கிறது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 2, 2022, 11:10 [IST]
Other articles published on Oct 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+