Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார் எதிர்காலம் குறித்து வாட்சன் கணிப்பு.. யாரிடமும் இல்லாத ஸ்பெஷல் திறமை என பாராட்டு

சிட்னி : t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூரியகுமார் யாதவ் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

நடப்பாண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை சூரியகுமார் படைத்திருக்கிறார்.

ஏற்கனவே இதற்கு முன்பு கடந்த ஆண்டு பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் இத்தகைய சாதனை படைத்திருந்தார். தற்போது சர்வதேச டி 20 தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாதவ் முதலிடம் பிடித்திருக்கிறார்.

கண்களுக்கு விருந்து

கண்களுக்கு விருந்து

இந்த நிலையில் சூரிய குமார் யாதவ் குறித்து பேசிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வாட்சன், சூரிய குமார் பேட்டிங் செய்வது கண்களுக்கு விருந்து படைப்பது போல் இருப்பதாக கூறினார்.இது குறித்து பேசி அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சூரிய குமார் யாதவ் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதை பார்த்திருக்கிறேன். ஆனால் அதைவிட சிறப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஆடி வருவது நிச்சயம் பாராட்டத்தக்கது.

தனித் திறமை

தனித் திறமை

ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சூரியகுமார் ஆடும் விதம் தனித்துவமானது. பலராலும் இது போன்ற டி20 கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் ஆட முடியாது. சூரிய குமாரிடம் இருப்பது அரிய வகை திறமை. பேட்டிங் செய்யும்போது பந்து வீச்சாளர்களின் மனதை அவர் படிக்க முயல்கிறார். பந்துவீச்சாளர் எப்படி பந்து வீசப் போகிறார்? பில்டர்கள் எங்கே இருக்கிறார்கள்? நாம் அடித்தால் பந்து எங்கே போகும் என்பதெல்லாம் அவரால் அறிய முடிகிறது.

பிரம்மிக்க வைக்கிறது

பிரம்மிக்க வைக்கிறது

இது நிச்சயம் தனித்துவமான திறமை. இது போன்ற திறமையை நான் இதற்கு முன்னால் பார்த்தது கிடையாது. இது போன்ற ஆட்டத்தை ஒரு முறையோ இரண்டு முறையோ ஆடலாம். ஆனால் தொடர்ந்து இதேபோன்று விளையாடுவது நிச்சயம் பிரம்மிக்க வைக்கிறது. நிச்சயம் அவர் ஒரு தனித்திறமை வாய்ந்த வீரர் தான்.

சூர்யாவின் எதிர்காலம்

சூர்யாவின் எதிர்காலம்

சூரியகுமார் யாதவ் தொடர்ந்து இப்படியேதான் ஆடுவார் என நினைக்கிறேன். அவருடைய ஆட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது. என்னுடைய கணிப்பு சூரியகுமார் யாதவும் இதே போன்ற ஆட்டத்தை தொடர்ந்து அதிக காலம் விளையாடுவார்.அவர் செய்வது ரிஸ்க் எடுத்து விளையாடுவது போல் இருக்கலாம். ஆனால் அவருடைய ஷாட்டில் எவ்வித ஆபத்தும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்று வாட்சன் கூறினார்.

Story first published: Tuesday, November 8, 2022, 19:26 [IST]
Other articles published on Nov 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+