நான் அடிச்சு தூக்குவேன்... சொல்லி அடித்த கில்லி ஷேன் வாட்சன்
துபாய் : நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே சார்பில் விளையாடிய ஷேன் வாட்சன், டூ பிளசிஸ் உடன் இணைந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் வந்த நிலையில் அதையெல்லாம் உடைத்து தூர எறிந்து தன்னுடைய பார்மை உறுதி செய்துள்ளார் வாட்சன்.
இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் நேற்றைய போட்டியில் மோதிய அவர், அதற்கு முந்தைய நாளில், சிஎஸ்கேவின் பர்பெக்ட் ஆன போட்டி வரவுள்ளதாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தொடர்ந்து 3 தோல்விகள்
ஐபிஎல்லின் இந்த சீசனில் சிஎஸ்கே இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்ற அந்த அணி தொடர்ந்து 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

துவக்க வீரர்கள் அபாரம்
இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மோதிய சிஎஸ்கே 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டூ பிளசிஸ் ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.

தூக்கி அடித்த வீரர்கள்
துவக்க வீரர்களாக களமிறங்கிய அவர்கள் 179 என்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெரிய இலக்கை சர்வ சாதாரணமாக தூக்கி அடித்தனர். மைதானத்தில் பறந்த சிக்ஸ்கள் மற்றும் பவுண்டரிகளால் மைதானம் பரபரப்புக்கு உள்ளானது. டிவியில் பார்த்துக் கொண்டிருந்தாலும் உற்சாகத் தீயால் ரசிகர்கள் ஆஃப் ஆகினர்.

பர்பெக்ட் ஆட்டம்
இந்நிலையில், நேற்று போட்டி நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினமே ஷேன் வாட்சன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சிஎஸ்கேவின் பர்ஃபெக்ட் ஆட்டம் வந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷேன் வாட்சனுக்கு அதிக வயதாகிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் நேற்றைய போட்டியில் தன்னை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications