Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வு முடிவை அறிவித்த பிரபல சென்னை அணி வீரர்... குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடிவு

சென்னை: ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி 20 கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக வாட்சன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் தொடக்க வீரராக ஷேன் வாட்சன் களமிறங்கி வருகிறார். தற்போது அவரின் வயது 37. வாட்சன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

Shane Watson retires from australias big bash

சிட்னி தண்டர்ஸ் அணியில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமையும் வாட்சனுக்கே சேரும். நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வாட்சன் பிக் பேஷ் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட திட்டமிட்டுள்ளதால் இந்த முடிவு என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால், வெளிநாடுகளில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஷேன் வாட்சன் இதுவரை 700க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 25,000க்கும் அதிகமான ரன்களும், 600 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார்.

சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். வாட்சன் கடைசியாக நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடதக்கது.

Story first published: Friday, April 26, 2019, 19:47 [IST]
Other articles published on Apr 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+