Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேஎல் ராகுல் ? சூர்யகுமார் ? பாபர் அசாம் ? யார் சிறந்த வீரர்.. ஆஸி. முன்னாள் வீரர் வாட்சன் பதில்

மும்பை : டி20 கிரிக்கெட்டில் தற்போது சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் பளிச்சென்று பதில் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் சூரிய குமார் யாதவும், கே எல் ராகுலும் அதிரடியாக விளையாடினார்கள்.

இதன் மூலம் தனது ஸ்ட்ரைக் ரேட் தொடர்பான விமர்சனத்திற்கு கே எல் ராகுல் பதிலடி கொடுத்துள்ளார்.

ராகுல் ரிட்டர்ன்ஸ்

ராகுல் ரிட்டர்ன்ஸ்

காயத்திலிருந்து திரும்பிய ராகுல் ஜிம்பாப்வேக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் விளையாடி அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து ஆசிய கோப்பை டி20 தொடரில் கே எல் ராகுலின் செயல்பாடு விமர்சனத்திற்கு உள்ளானது. இருப்பினும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அவர் 62 ரன்கள் சேர்த்தார். ஆனால் அது வெறும் சம்பிரதாய ஆட்டமாக அமைந்தது.

ஸ்ட்ரைக் ரேட் விமர்சனம்

ஸ்ட்ரைக் ரேட் விமர்சனம்

அந்தத் தொடரில் கே எல் ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் 122 என்ற அளவில் இருந்தது. இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்தித்தபோது பலரும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு தமது பேட்டிங்கில் இருக்கும் குறையை சரி செய்து வருவதாக அவர் பதிலளித்தார். இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 32 பந்துகளை எதிர்கொண்ட கே எல் ராகுல் 55 ரன்கள் விளாசினார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் வாட்சனிடம் தங்களுக்கு பிடித்தமான வீரர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது .

வாட்சன் பதில்

வாட்சன் பதில்

அதற்கு பதில் அளித்த அவர் கே எல் ராகுல் தமது விருப்பமான வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். அவருடைய பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் , சுழற் பந்துவீச்சாளர்கள் என அனைவரையும் அவர் எதிர்கொள்ளும் விதம் என்னை கவர்ந்தது. கிரிக்கெட்டில் உள்ள அனைத்து ஷாட்களும் அவர் நன்கு ஆடுவார். சில சமயம் அவர் பந்தை அடிக்கும் விதம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டேமியன் மார்டினை எனக்கு நினைவுபடுத்தும்.

ராகுலுக்கு பாராட்டு

ராகுலுக்கு பாராட்டு

இருவருமே பந்தை வேகமாக அடிப்பார்கள். ஆனால் பார்க்கும் போது அவர்கள் மெனக்கெடுவது போல் நமக்கு தெரியாது. அதேபோன்று சூரியகுமார் யாதவும் பாபர் அசாமும் சிறப்பாக விளையாடுகிறார்கள். இருவரும் தற்போது ஒரே அளவில் தான் இருக்கிறார்கள். கடந்த சில போட்டிகளாக சூரியகுமார் விளையாடும் விதம் காண்போரை கவரும் வகையில் இருக்கிறது. ஆனால் இந்த மூன்று வீரர்களில் யார் சிறந்த வீரர் என்று கேட்டால், கே.எல் ராகுல் என்றுதான் கூறுவேன் என்று வாட்சன் தெரிவித்தார்.

Story first published: Wednesday, September 21, 2022, 22:48 [IST]
Other articles published on Sep 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+