Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 ஓவர் போட மாட்டார்.. பேட்டிங்கில் 10 ரன்களும் அடிக்க மாட்டார்.. நட்சத்திர வீரரை விளாசிய ஸ்ரீகாந்த்

சென்னை: உலகக்கோப்பை அணியில் இந்திய அணி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்கூர் அணியில் இருந்தால் 8வது வீரர் வரை பேட்டிங் வரிசை இருக்கும் என்பதால், 3வது வேகப்பந்துவீச்சாளராக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அண்மையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

shardul Tahkur wont bowl 10 overs and wont score 10 runs says Kris Srikanth

இந்த நிலையில் ஷர்துல் தாக்கூரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதை முன்னாள் தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசுகையில், எல்லோரும் நம்பர் 8 வரை பேட்டிங் இருக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் ஷர்துல் தாக்கூர் 10 ரன்கள் தான் அடிக்கிறார். அதேபோல் முழுமையாக 10 ஓவர் கூட வீசுவதில்லை. நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் ஷர்துல் தாக்கூர் எத்தனை ஓவர்களை வீசினார்.

நேபாள் அணிக்கு எதிரான வெறும் 4 ஓவர்களை தான் ஷர்துல் தாக்கூர் வீசினார். எப்போதும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவோ, ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவோ விளையாடியதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது தான் ஆட்டம். அதன் காரணமாக தான் பேட்டிங் சராசரியை பார்த்து ஏமாறாதீர்கள் என்று சொல்கிறேன்.

என்னை பொறுத்தவரை பேட்டிங் சராசரியை பார்ப்பதை விடவும், எப்படியான போட்டிகளில் எந்த அணியுடன் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இந்திய அணிக்காக 33 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீரர் ஷர்துல் தாக்கூர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 7, 2023, 22:08 [IST]
Other articles published on Sep 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+