Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய குழப்பம்.. ஷரத்துல் தாக்கூர் பெயரை அறிவித்த பிசிசிஐ.. ஆனால் லிஸ்டில் நடராஜன்.. என்ன நடக்குமோ?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவ், ஷமி காயம் அடைந்துள்ள நிலையில், ஷரத்துல் தாக்கூர் 15 பேர் கொண்ட அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிரடியாக ஆடி வெற்றிபெற்றது. இந்திய அணியின் வெற்றி, அணியில் இருக்கும் வீரர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்து உள்ளது.

உத்வேகம்

உத்வேகம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பவுலர் உமேஷ் யாதவ் காயம் அடைந்தார். இரண்டாவது இன்னிங்சில் காயம் அடைந்த உமேஷ் யாதவ் பாதியில் வெளியேறினார். இதனால் மீதம் இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் உமேஷ் யாதவ் ஆட மாட்டார்.

குழப்பம்

குழப்பம்

இந்த நிலையில் உமேஷ் யாதவிற்கு மாற்றாக இந்திய அணியில் இடம் பிடிக்க போகும் வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவ் காயம் அடைந்துள்ள நிலையில், ஷரத்துல் தாக்கூர் 15 பேர் கொண்ட அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் உமேஷ் யாதாவிற்கு மாற்றாக அறிவிக்கப்படவில்லை.

யாருக்கு மாற்று

யாருக்கு மாற்று

இந்திய அணியில் காயம் அடைந்த ஷமிக்கு மாற்றாக ஷரத்துல் தாக்கூர் 15 பேர் கொண்ட அணிக்குள் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் உமேஷ் யாதவிற்கு மாற்றாக நடராஜன் அணிக்குள் வருவார் என்று கூறுகிறார்கள். 15 பேர் கொண்ட அணியில் இருந்து உமேஷ் , ஷமி வெளியேறிய நிலையில் ஷரத்துல் தாக்கூர், நடராஜன் உள்ளே வருவார் என்கிறார்கள்.

யார்

யார்

தற்போது இந்திய அணியில் பும்ரா, நடராஜன், சைனி, சிராஜ், ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளனர் . இதில் சிராஜ், பும்ரா கட்டாயம் ஆட உள்ள நிலையில் சைனி, நடராஜன், ஷரத்துல் தாக்கூர் ஆகிய மூவரில் யாருக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Wednesday, December 30, 2020, 10:52 [IST]
Other articles published on Dec 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+