Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"சிரமத்திற்கு வருந்துகிறேன்" - மும்பை விமான நிலையத்தில் ஷர்துல் தாக்கூருக்கு சிக்கல்.. ஹர்பஜன் உதவி

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்கூர் டி20 உலககோப்பை தொடரில் ரிசர்வ் வீரராக பங்கேற்க ஆஸ்திரேலியா செல்ல உள்ளார்.

வாழக்கை அடுத்த நிமிடம் நமக்கு அளிக்க காத்திருக்கும் ஆச்சரியம் நம்மை எங்கேயோ கொண்டு செல்லும் என்பார்களே. அது தான் ஷர்துல் தாக்கூர் வாழ்க்கையில் நடந்தது.

இந்திய அணியிலேயே கடந்த 10 நாட்களுக்கு முன்பு இல்லாத ஷர்துல் தாக்கூருக்கு தற்போது டி20 உலககோப்பை கிடைத்துள்ளது.

டிவிட்டரில் புகார்

டிவிட்டரில் புகார்

இதனால் டெல்லியில் போட்டியை முடித்து விட்டு ஷர்துல் தாக்கூர் இன்று மும்பை வந்தடைந்தார். அப்போது, ஷர்துல் தாக்கூரின் லக்கேஜ் வந்து சேரவில்லை. இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த ஷர்துல் தாக்கூருக்கு உதவ அங்கே எந்த அதிகாரியும் நிற்கவில்லை. இதனால் கடுப்பான ஷர்துல் தாக்கூர், டிவிட்டரில் புகார் அளித்தார்.

லக்கேஜ் வரவில்லை

லக்கேஜ் வரவில்லை

அதில் மும்பை விமான நிலையத்தில் காத்து கொண்டு இருக்கிறேன். இன்னும் என்னுடைய கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் லக்கேஜ் வந்து சேரவில்லை. எப்போதும் மும்பையில் இந்த பிரச்சினையை நான் சந்திக்கிறேன். புகார் அளிக்க கூட ஒரு அதிகாரி இல்லை. உடனே ஒரு அதிகாரியை ஏர் இந்தியா அனுப்ப வேண்டும் என்று ஷர்துல் தாக்கூர் பதிவிட்டி இருந்தார்.

உதவிய ஹர்பஜன்

உதவிய ஹர்பஜன்

இதனை கண்டதும், ஹர்பஜன் சிங் டிவிட்டரில் பதில் அளித்துள்ளார். உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறேன். உங்களுடைய உபகரணங்கள் விரைவில் உங்களை வந்து சேரும். உடனே எங்கள் ஊழியரை உதவிக்கு அனுப்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணம், அவருக்கு ஏர் இந்தியாவில் கௌரவ பதவி வழங்கப்பட்டு இருந்தது.

ஆஸி பயணம்

ஆஸி பயணம்

இதனால், ஷர்துல் தாக்கூர் கொடுத்த புகாருக்கு ஹர்பஜன் சிங் உதவுவதாக முன் வந்தார். இதற்கு ஷர்துல் தாக்கூர் என் உடைமைகள் கிடைத்துவிட்டது. நன்றி பாஜி என்று குறிப்பிட்டுள்ளார். ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் நாளை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 12, 2022, 18:34 [IST]
Other articles published on Oct 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+