Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: எல்லாம் ஓரளவுக்குதான்.. கட்டம்கட்டப்படும் ஷர்துல் தாக்கூர்.. அடுத்த போட்டியில் நீக்கம்?

மொஹாலி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தாலும், வீரர்கள் சிலரின் செயல்பாடுகள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக 8வது வீரரான ஷர்துல் தாக்கூர் நேற்றைய ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசி 78 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தி இருப்பார் என்றாலும், 5 பந்துவீச்சாளர்களோடு இந்திய அணி களமிறங்கியதையும் பார்க்க வேண்டும். ஒருவேளை உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 5 பந்துவீச்சாளர்களோடு களமிறங்கலாம் என்று திட்டம் வைத்தால் ஷர்துல் தாக்கூர் நீக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

Shardul Thakur likely to be replaced by Mohammad Siraj in the 2nd ODI against Australia

ஏனென்றால் 5 பந்துவீச்சாளர்களில் ஒருவர் மோசமான பந்துகளை வீசினாலும், எதிரணிகள் அந்த பிரஷரை மற்ற வீரர்களுக்கு கடத்திவிடும். மொஹாலி மைதானத்தில் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் வீசுவதே சரியான திட்டம் என்பது பார்க்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். நட்சத்திர வீரர் முகமது ஷமி ஷமியும் அதனைதான் செய்தார்.

பும்ரா மட்டுமே வேகத்தை வைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு வேடிக்கை காட்டினார். ஆனால் ஷர்துல் தாக்கூர் கடைசி வரை ஷமியின் யுக்தியை கடைபிடிக்காமல் தனது ஸ்டைலில் லென் மற்றும் லெந்தில் ரிஸ்க் எடுத்தது அவருக்கு பின்னடைவாக மாறியுள்ளது. அதேபோல் இந்தப் போட்டியின் மூலமாக ஷர்துல் தாக்கூரை எப்படியான சூழல்களில் பயன்படுத்த வேண்டும் என்று தெளிவும் இந்திய அணி கிடைத்திருக்கும்.

Shardul Thakur likely to be replaced by Mohammad Siraj in the 2nd ODI against Australia

வெறும் 5 பந்துவீச்சாளர்களுடன் சென்றால் ஷர்துல் தாக்கூரை பிளேயிங் லெவனில் எடுப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக மாறும். 6 பந்துவீச்சாளர்களுடன் சென்றால், ஷர்துல் தாக்கூர் ரன்களை விட்டுக் கொடுத்தால் அவரின் ஓவர்களை வீச மாற்று வீரர்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதன் மூலம் ஷர்துல் தாக்கூரை வழக்கம் போல் அவரின் வலிமையான ஏரியாமான மிடில் ஓவர்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால் அடுத்தப் போட்டிகளில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக சிராஜ் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் சிஎஸ்கே அணியில் தோனியும் ஷர்துல் தாக்கூரை அவ்வாறே பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 23, 2023, 15:20 [IST]
Other articles published on Sep 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+