Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உட்கார்ந்து பேச நேரமில்லை.. டிராவிட் எனக்கு அளித்த உறுதி மொழி.. ஷர்துல் தாக்கூர் பேச்சு

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டராக விளங்கி வந்தவர் ஷர்துல் தாக்கூர்.

ஆனால் தற்போது டி20 உலக கோப்பை தொடருக்கான ரிசர்வ் அணியில் கூட ஷர்துல் தாக்கூருக்கு இடம் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு பேட்டிங்,பந்துவீச்சு, பில்டிங் என அனைத்திலும் கலக்கிய ஷர்துல், கடந்த சில போட்டிகளில் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதற்கு காரணம் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து டெல்லி அணிக்கு மாறியதால் அவருடைய உத்வேகம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் இடம் பெற ஷர்துல் முயற்சி செய்து வருகிறார். தனது பந்துவீச்சு பேட்டிங் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்திய அணி நிர்வாகம்

இந்திய அணி நிர்வாகம்

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்களை ஷர்துல் தாக்கூர் கைப்பற்றினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷர்துல் தாக்கூர், இந்திய அணி நிர்வாகம் என்னிடம் ஒரு முக்கியமான கருத்தை கூறினார்கள். டெஸ்ட் ,ஒரு நாள், டி20 என மூன்று போட்டிகளிலும் நான் அணியின் முக்கிய வீரராக இருப்பேன் என்று சொன்னார்கள்.

பேசவே நேரமில்லை

பேசவே நேரமில்லை

அதன் பிறகு எங்களுக்கு பேசவே நேரமில்லை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.ஒரு தொடருக்கும் இன்னொரு தொடருக்கும் நான்கு நாட்கள் தான் இடைவெளி இருக்கிறது. இதனால் இந்திய அணி நிர்வாகத்துடன் நான் பேசிக்கொள்ள வாய்ப்பு அமையவில்லை. தற்போது நான் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறேன். கடைசியாக நான் விளையாடிய இரண்டு தொடர்களிலும் விக்கெட்டுகளை வீழ்த்தினேன்.

எங்கே சரிந்தார் ஷர்துல்?

எங்கே சரிந்தார் ஷர்துல்?

இதனால் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து எதிர்பார்க்கிறேன்.எப்போது அழைத்தாலும் இந்திய அணிக்காக விளையாடுவேன். ஷர்துலின் சரிவுக்கு அவர்ய்டைய முக்கிய ஆயுதமான Nuckle ball களை தாக்கூர் சிறப்பாக வீசுவதில்லை. மேலும் அவருடைய உயரம் காரணமாக அவருக்கு பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். தற்போது அதையும் அவர் பயன்படுத்தவில்லை.இதனால் இந்திய அணிக்கு ஷர்துல் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

Story first published: Friday, September 23, 2022, 13:08 [IST]
Other articles published on Sep 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+