ரத்தம் சொட்ட சொட்ட.. வலியை முகத்தில் காட்டாமல் பொளந்து கட்டிய "மாஸ்டர்" ஷரத்துல்.. மாஸ் ஆட்டம்
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஷரத்துல் தாக்கூர் கையில் ரத்தம் சொட்ட சொட்ட ஆடியது வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டும் உள்ளது. 200 ரன்களுக்கு முன்பாக இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தற்போது அதிரடியாக ஆடி வருகிறது.
வாஷிங்க்டன் சுந்தர் - ஷரத்துல் தாக்கூர் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு உள்ளனர். இவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 70+ ரன்களை எடுத்துள்ளார்.

250 ரன்கள்
இதனால் இந்திய அணி 250+ ரன்களே எடுக்காது என்று கருத்தப்பட்ட நிலையில் 260+ ரன்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் டாப் ஸ்கோரராக ஷரத்துல் தாக்கூர் உருவெடுத்துள்ளார். முதல் இரண்டு பந்துகளை அடுத்தடுத்து 2 பவுண்டரிகளுடன்தான் ஷரத்துல் தாக்கூர் தொடங்கினார்.

அதிரடி
அதன்பின் வரிசையாக அதிரடியாக ஆடிய ஷரத்துல் தாக்கூர் தற்போது அரைசதத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். இடையில் ஹஸல்வுட் பவுலிங்கில் ஷரத்துல் தாக்கூர் விரலில் அடிப்பட்டது. வேகமாக பவுன்ஸ் ஆன பந்து 143 கிமீ வேகத்தில் ஷரத்துல் தாக்கூர் விரலை தாக்கியது.

கிழிந்தது
இதனால் அவரின் விரலில் லேசான சதை கிழிந்தது. இதன் காரணமாக அவரின் விரலில் இருந்து ரத்தம் வந்தது. விரலில் வந்த ரத்தத்தோடு தொடர்ந்து ஆடிய ஷரத்துல் தாக்கூர், களத்தில் அதிரடி காட்டி வருகிறார். கையில் பேண்ட் எய்ட் கட்டிக்கொண்டு முகத்தில் வலியை காட்டாமல் ஷரத்துல் தாக்கூர் தொடர்ந்து ஆடி வருகிறார்.

மீண்டும்
இதே விரலில் அதன்பின் இரண்டு முறை ஷரத்துல் தாக்கூருக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல், வலியை சகித்துக் கொண்டு ஷரத்துல் தாக்கூர் தொடர்ந்து ஆடினார். ஒரு பவுலராக் இன்று ஷரத்துல் தாக்கூர் பேட்டிங் செய்த விதம் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications