Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது புதுசா இருக்கே!! தேர்வுக் குழுவை பற்றி புகார் சொன்னால் அணியில் இடம் கிடைக்குமா?

மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமானார் ஷர்துல் தாக்குர்.

வேகப் பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்குர் வெறும் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் தன் டெஸ்ட் அறிமுகத்தை காயம் காரணமாக முடித்துக் கொண்டார்.

அதன் பின் அணித் தேர்வாளர்கள் யாரும் தன்னுடன் பேசவில்லை என புகார் கூறியுள்ளார் தாக்குர். இவருக்கு முன் பல வீரர்கள் இதே புகாரை கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியில் காயம்

முதல் போட்டியில் காயம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் ஷர்துல் தாக்குர். அந்த போட்டியில் பத்து பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அசத்தல் ஆட்டம்

அசத்தல் ஆட்டம்

அதன் பின் இரு மாதங்கள் காயத்தில் இருந்த அவர் அதில் இருந்து மீண்டு ரஞ்சி தொடரில் மும்பை அணிக்காக ஆடி வருகிறார். சத்திஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய அவர் இரண்டு இன்னிங்க்ஸ்களில் 79 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

தொடர்பு கொள்ளவில்லை

தொடர்பு கொள்ளவில்லை

இந்த நிலையில் ஷர்துல் மீண்டும் இந்திய அணிக்கு ஆடுவாரா என்பது தெரியாத நிலையில், அவர் காயத்திற்குப் பின் தேர்வாளர்கள் யாரும் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என புகார் கூறியுள்ளார்.

பல வீரர்கள் சொன்ன புகார்

பல வீரர்கள் சொன்ன புகார்

ஏற்கனவே, கருண் நாயர், முரளி விஜய், கேதார் ஜாதவ், அம்பதி ராயுடு என எராளமான வீரர்கள் தங்களை தேர்வுக் குழுவினர் தொடர்பு கொள்ளவில்லை என புகார் கூறி இருந்தனர். அவர்களில் கருண் நாயர் தவிர்த்து அனைவருக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்தது.

மறுப்பு சொன்ன பிசிசிஐ

மறுப்பு சொன்ன பிசிசிஐ

தற்போது ஷர்துல் தாக்குர் அதே புகாரை கூறியுள்ளார். ஒருவேளை அவரும் இதன் மூலம் அணியில் இடம் பிடிக்கலாம் என நினைக்கிறாரோ என தோன்றுகிறது. எனினும், தேர்வுக் குழு இவரது புகாரை மறுத்துள்ளது.

பேசி வருகிறோம்

பேசி வருகிறோம்

பிசிசிஐ-ஐ சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகையில், ஷர்துல் தாக்குர் ரஞ்சி தொடரில் ஆடத் துவங்கியது முதல் அவரை தேர்வுக் குழு உறுப்பினர் சந்தித்து பேசி வருகிறார். அவரை இந்தியா ஏ அணிக்காக தயாராகுமாறு கூறியுள்ளார் எனவும் தெரிவித்தார்.

Story first published: Wednesday, January 9, 2019, 11:27 [IST]
Other articles published on Jan 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+