Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

VIDEO: போட்டியில் முறைத்த தோனி… சாரி தல…! கையெடுத்து கும்பிட்ட அந்த வீரர்

மும்பை:மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணியின் கேப்டன் தோனியிடம் சக வீரர் ஷர்துல் தாகூர் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், சென்னை அணியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது. அத்துடன், புள்ளிப்பட்டிலில் இருந்தும் கீழே இறங்கியது.

8வது ஓவரில் ஜடேஜா

அந்த ஆட்டத்தில், மும்பை அணியின் பேட்டிங்கின் போது, சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தது. 8வது ஓவரை சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா வீசினார். அந்த ஆட்டத்தில், மும்பை அணியின் பேட்டிங்கின் போது, சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தது. 8வது ஓவரை சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா வீசினார்.

பாயிண்ட் திசையில் யுவுராஜ்

பாயிண்ட் திசையில் யுவுராஜ்

அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட யுவராஜ் சிங் பாயிண்ட் திசையில் அடிக்கிறார். அந்த பந்தை, அங்கு பீல்டிங் செய்த ஷர்துல் தாகூர் தவற விடுகிறார்.

எங்கோ போகும் பந்து

எங்கோ போகும் பந்து

அத்துடன், விக்கெட் கீப்பர் தோனிக்கு நேராக பந்தை எறியாமல் தூரமாக எங்கேயோ வீசினார். அதனால், மேலும் ஒரு ரன் ஓட எதிரணி பேட்ஸ்மேன்கள் முயற்சித்தனர்.

தோனியிடம் மன்னிப்பு

தோனியிடம் மன்னிப்பு

அதனால், சற்று முறைத்து பார்த்த தோனியிடம், ஷர்துல் தாகூர் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை சென்னை ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

Story first published: Friday, April 5, 2019, 13:04 [IST]
Other articles published on Apr 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+