Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷர்துல் தாக்கூர் ஹாட்ரிக் சாதனை.. 2 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்த மேகாலயா.. கம்பீருக்கு தக்க பதிலடி

மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவுக்கு பிறகு சர்துல் தாக்கூர் தான் செயல்பட்டார். இங்கிலாந்து அணிக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தன்னுடைய பேட்டிங் மற்றும் பந்து வீச்சால்
சர்துல் தாக்கூர் அபாரமாக செயல்பட்டு இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார்.

இதனால் ரசிகர்கள் அவரை லார்ட் ஷர்துல் தாக்கூர் என்று தான் அழைப்பார்கள். இந்த சூழலில் திடீரென்று சர்துல் தாக்கூருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் மீண்டும் அணிக்கு கமபேக் கொடுத்து தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடினாலும் பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு அவரை அணியை விட்டு நீக்கி விட்டார். தற்போது ஒரு நாள், டி20, டெஸ்ட் என எந்த ஒரு அணியிலும் சர்துல் தாக்கூர் இல்லை.

shardul thakur hat trick ranji trophy

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மீண்டும் தேர்வு செய்த போது அந்த தொடரும் அவர் சரியாக விளையாடததால் தற்போது அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். ஐபிஎல் மெகா ஏலத்தில் சர்துல் தாக்கூர் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த சர்துல் தாக்கூர் தற்போது தன்னுடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு ரஞ்சி கிரிக்கெட்டில் ஜோலித்து வருகிறார்.

அண்மையில் ஜம்மு காஷ்மீருக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தடுமாறிய போது தன்னுடைய பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி சர்துல் தாக்கூர் சதம் அடித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது பந்துவீச்சிலும் சர்துல் தாக்கூர் ஒரு சாதனை படைத்திருக்கிறார். மேகாலயா அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில், முதல் ஓவரை வீசிய சர்துல் தாக்கூர் தொடக்க வீரர் நிஷாந்த
சக்கரபோத்தியை டக் அவுட் ஆக்கினார்.

மீண்டும் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை மீண்டும் வீசிய சர்துல் தாக்கூர் அபாரமாக பந்து வீசி அனிருத்,சுமித் குமார், சஸ்கிராப் ஆகியோரை அடுத்தடுத்து டக் அவுட் ஆக்கி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் மும்பை அணிக்காக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய ஐந்தாவது பவுலர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதனால் மேகாலயா அணி ஒரு கட்டத்தில் இரண்டு ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தொடர்ந்து மும்பை அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீச மேகாலயா அணி 86 ரன்களில் ஆட்டம் இழந்தது. நடப்பு சீசனில் சர்துல் தாக்கூர் பேட்டிங்கில் 297 ரன்களும், பந்துவீச்சில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இந்தப் போட்டியில் மும்பை அணி இன்னிங்ஸ் வித்தியாசம் அல்லது 10 விக்கெட் வித்தியாசத்தில் போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகிவிடும்.

Story first published: Thursday, January 30, 2025, 14:40 [IST]
Other articles published on Jan 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+