Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது சுய அழிவுக்கான முடிவு.. திடீரென நீக்கப்பட்ட அதிரடி வீரர் சஞ்சு சாம்சன்.. காங்.எம்.பி அதிருப்தி!

கேரளா: பிரபல உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் சஞ்சு சாம்சனுக்கு கேரள அணி நிர்வாகம் பெரிய செக் வைத்துள்ளது .

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு தொடர்கள் நடைபெற தொடங்கியுள்ளன. சமீபத்தில் டி20 தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி நடைபெற்ற நிலையில், ஒரு நாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் பிப்.20ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

விஜய் ஹசாரே தொடருக்கான கேரள அணி வீரர்களின் விவரங்களை அம்மாநில கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. அதில் கேப்டன் பதவியிலிருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் கேரள அணியை சிறப்பாக வழிநடத்தி சஞ்சு சாம்சன் கவனம் பெற்றார். அவரின் கேப்டன்சியில் 5 போட்டிகளில் விளையாடிய கேரள அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று, தொடரில் 3ம் இடம் பிடித்தது.

ஐ.பி.எல்-ல் வாய்ப்பு

ஐ.பி.எல்-ல் வாய்ப்பு

சையத் முஸ்தாக் அலி கோப்பையில் சிறப்பான கேப்டன்சியை வெளிப்படுத்தியதால் சஞ்சு சாம்சன் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரராக இருந்தபோதிலும் அவர்மீது நம்பிக்கை வைத்து ஸ்மித்திற்கு பதிலாக அவரை நியமித்துள்ளது ராஜஸ்தான் அணி.

காரணம் என்ன?

காரணம் என்ன?

கொரோனாவுக்கு பிறகு நடைபெறும் போட்டி என்பதால் பல்வேறு வீரர்களின் செயல் ஆற்றல் சற்று குறைந்தது என்றே கூறலாம். அந்த வகையில் சையத் முஸ்தாக் அலி கோப்பையில் சஞ்சு சாம்சன் தனி ஆளாக சோபிக்க தவறினார். 5 போட்டிகளில் அவர், 32, 22, 16, 7 and 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாகவே அவர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம்.

எம்.பியின் ஆதங்கம்

எம்.பியின் ஆதங்கம்

கேரள கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு எம்.பி. சசிதரூர் அதிருப்தி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கேப்டன் பதவியிலிருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆஷிப் மற்றும் பசில் தம்பி ஆகியோர் அணியில் சேர்க்கப்படாததும் வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.

போட்டி விவரம் என்ன?

போட்டி விவரம் என்ன?

விஜய் ஹசாரே தொடர் வரும் பிப்.20ம் தேதி தொடங்கி மார்ச் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக பிப்.13, 15 மற்றும் 17ம் தேதிகளில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Story first published: Tuesday, February 9, 2021, 12:48 [IST]
Other articles published on Feb 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+