Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த இந்திய வீரருக்கு உரிய கௌரவம் கிடைக்கவில்லை.. அப்பட்டமான உண்மை.. ஷான் பொல்லாக் அதிரடி!

மும்பை : 1990களில் இந்திய அணியில் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக இருந்தவர் ஜவகல் ஸ்ரீநாத்.

Recommended Video

Pollock says Srinath didn’t get the credit he deserved.

இந்திய அணியில் கபில் தேவுக்குப் பின் பெயர் சொல்லும் வேகப் பந்துவீச்சாளர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் இருந்தனர். அவர்களில் முதன்மையானவர் ஜவகல் ஸ்ரீநாத்.

கிரிக்கெட் உலகில் அவருக்கு உரிய கௌரவம் கிடைக்கவில்லை என சுட்டிக் காட்டி உள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர் ஷான் பொல்லாக்.

வேகப் பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்

வேகப் பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்

ஜவகல் ஸ்ரீநாத் 1991 முதல் 2003 உலகக்கோப்பை தொடர் வரை இந்திய அணியில் ஆடினார். 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 236 விக்கெட்களும், 229 ஒருநாள் போட்டிகளில் ஆடி 315 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார் ஸ்ரீநாத். 2003 உலகக்கோப்பை தொடரில் ஜாகிர் கான், ஆஷிஷ் நெஹ்ரா வேகப் பந்துவீச்சு கூட்டணியை வழிநடத்தினார்.

உரிய கௌரவம் இல்லை

உரிய கௌரவம் இல்லை

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் வீரர் மைக்கேல் ஹோல்டிங், இங்கிலாந்து அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு ஆகியோருடன் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷான் பொல்லாக், ஜவகல் ஸ்ரீநாத் அவருக்கு உரிய கௌரவத்தை பெறவில்லை என குறிப்பிட்டார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அதற்கு காரணம், அப்போது அவருக்கு ஜோடியாக இணைந்து பந்துவீச்சில் அச்சுறுத்த ஒரு நிலையான வீரர் இல்லை. வெங்கடேஷ் பிரசாத் சில காலம் அவருடன் ஜோடியாக பந்து வீசி உள்ளார். ஆனால், அவர்கள் ஜோடி உலகை அச்சுறுத்தவில்லை.

இந்தியாவில் ஜோடி இல்லை

இந்தியாவில் ஜோடி இல்லை

அதை குறிப்பிட்ட ஷான் பொல்லாக், நான் ஆடிய காலத்தில், பாகிஸ்தான் அணியில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கர்ட்லி ஆம்ப்ரோஸ், கர்ட்னி வால்ஷ் இருந்தனர். ஆஸ்திரேலியாவில் மெக்கிராத், பிரெட் லீ இருந்தனர். தற்போது இங்கிலாந்தில் ஸ்டூவர்ட் பிராட் - ஆண்டர்சன் உள்ளனர் என இந்திய அணியில் ஸ்ரீநாத்துக்கு ஜோடி இல்லாததை சுட்டிக் காட்டினார்.

மறந்து விட்டோமா?

மறந்து விட்டோமா?

உண்மையில் ஷான் பொல்லாக் சொல்லும் வரை நம்மில் பலரும் அவரைப் பற்றி யோசித்து இருக்க வாய்ப்பே இல்லை. காரணம், இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் என்றாலே பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர் என்றால் ஸ்பின்னர்கள் என்ற நிலை தான் இருந்தது. சமீபத்தில் தான் பும்ரா, ஷமி குறித்து பேசி வருகிறோம். பொல்லாக் சொல்வது உண்மை தான்.

Story first published: Sunday, April 19, 2020, 19:40 [IST]
Other articles published on Apr 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+