Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்கு நிறைய அட்வைஸ் இருக்கு... ஆனா இப்ப சொல்ல முடியாது.. ஜோ பர்ன்ஸ் உறுதி

அடிலெய்ட் : இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள், டி20, பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

பகலிரவு டெஸ்ட் போட்டி கடந்த 17ம் தேதி துவங்கி அடிலெய்டில் நடைபெற்ற நிலையில், அதில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த போட்டியில் துவக்க வீரர் பிரித்வி 0 மற்றும் 4 ரன்களை அடித்த நிலையில், அவர் மிகவும் சிறப்பான வீரர் என்று ஆஸ்திரேலிய துவக்க வீரர் ஜோ பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

Shaw is obviously a quality player to be playing for India -Joe Burns

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் கடந்த 17ம் தேதி துவங்கி நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய பரித்வி ஷா, இரண்டு இன்னிங்சிலும் முறையே 0 மற்றும் 4 ரன்களை மட்டுமே அடித்து சரியான துவக்கத்தை தரத் தவறினார்.

இந்நிலையில் இந்தியாவிற்காக விளையாடிவரும் பிரித்வி ஷா மிகவும் சிறப்பான வீரர் என்று ஆஸ்திரேலிய துவக்க வீரர் ஜோ பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால் துவக்க வீரராக செயல்படுவது மிகவும் சவாலான விஷயம் என்றும், ஷாவிற்கு தான் இதுகுறித்து ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் பர்ன்ஸ் குறிப்பிட்டார். ஆனால் தாங்கள் இருவரும் எதிரெதிர் அணிகளில் விளையாடி வருவதால் தற்போது அதை கூற முடியாது என்றும் தொடரின் முடிவில் அதை தான் கூறவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Monday, December 21, 2020, 18:55 [IST]
Other articles published on Dec 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+