
உலகக்கோப்பை காயம்
உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய தவான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்தார். அதன் பின் அணியில் இருந்து நீக்கப்பட்டார். உலகக்கோப்பை தொடருக்கு பின் தன் காயத்தில் இருந்து மீள தேவையான பயிற்சிகள் மேற்கொண்டு, சரியாக வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அணித் தேர்வு செய்ய சில நாட்கள் இருக்கும் முன் தன் உடற்தகுதியை நிரூபித்துள்ளார் தவான்.

விமர்சனத்தில் இந்திய அணி
இதற்கிடையே, உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிச் சுற்றுடன் வெளியேறிய போது கேப்டன் கோலி மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதனால், அணியை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறார் கோலி. அவரது கேப்டன் பதவிக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டு இருக்கிறது.

புதிய பாதை
பல இளம் வீரர்கள் இந்திய அணி வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பலர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார்கள். கேப்டன் கோலி மற்றும் தேர்வுக் குழு அவர்களை மொத்தமாக வளைத்துப் போட்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பரிசோதனை செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

இரண்டு வீரர்கள்
பல இளம் வீரர்கள் இருப்பதால் அவர்களில் யாரை அணியில் தேர்வு செய்வது என்ற குழப்பமும் உள்ளது. துவக்க வீரர்களாக இடம் பெற மயங்க் அகர்வால், ஷுப்மன் கில் என இரண்டு வீரர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ராகுல் இருக்கிறார்
இவர்கள் தவிர, தவான் காயத்தில் இருந்த போது ராகுல் துவக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி இருந்தார். ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து துவக்கம் அளிக்க பல வீரர்கள் காத்துக் கொண்டு இருக்கும் நிலையில், தவானுக்கு அணியில் இடம் கிடைக்காது என்றே கருதப்படுகிறது.

தவானுக்கு இடம் இல்லை
தவானுக்கு "ஓய்வு" என்ற பெயரில் அல்வா கொடுத்து விட்டு, இளம் வீரர்களைத் தான் கேப்டன் கோலி தேர்வு செய்வார். அவர்கள் சிறப்பாக ஆடும் பட்சத்தில் தவான் மீண்டும் அணியில் இடம் பெறுவது கடினமான ஒன்றாக மாறி விடும்.


Click it and Unblock the Notifications