டெஸ்ட் போட்டியில்.. முதல் நாள் லன்ச் பிரேக்குக்கு முன்பு சதம் அடித்த தவான்.. புதிய சாதனை!
பெங்களூர்: டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார் இந்தியாவின் ஷிகர் தவான் .
இந்திய ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

துவக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் களமிறங்கினர். ஷிகர் தவான் தொடக்கம் முதலே மிகவும் அதிரடியாக விளையாடினர். அவர் 87 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 18 பௌண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.
டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ஷிகர் தவான் பெற்றார்.
இதற்கு முன்பு இதே போல் சதம் அடித்தவர்கள் பட்டியல்:
- ட்ரம்பெர் (ஆஸ்திரேலியா - 103* - வருடம் : 1902)
- மெக்கார்டினே (ஆஸ்திரேலியா - 112* - வருடம் : 1926)
- ப்ராட்மேன் (ஆஸ்திரேலியா - 105* - வருடம் : 1930)
- மஜித் கான் (பாகிஸ்தான் - 108* - வருடம் : 1976-77)
- டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா - 100* , வருடம் : 2016-17)
- ஷிகர் தவான் (இந்தியா - 104* , வருடம் : 2018)
Story first published: Thursday, June 14, 2018, 14:02 [IST]
Other articles published on Jun 14, 2018


Click it and Unblock the Notifications