மகளுக்குப் பிறந்த நாள்.. சூப்பர் டான்ஸுடன் கொண்டாடிய ஷிகர் தவான்.. ஸ்வீட் டாடி!
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், தனது மகள் அலியா தவானின் பிறந்த நாளையொட்டி அவருடன் ஒரு குட்டி டான்ஸ் போட்டு அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். பலரின் பாராட்டுக்களை அது பெற்றுள்ளது.
Recommended Video
ஆலியா, ஷிகர் தவானின் வளர்ப்பு மகள் ஆவார். தந்தை மீது மகளும், மகள் மீது தந்தையும் அப்படி ஒரு பாசம் வைத்துள்ளனர். ஆலியாவுக்கு செவ்வாய்க்கிழமை பிறந்த நாள். இதையடுத்து மகளும் அப்பாவும் டான்ஸ் ஆடி மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர்.
ஆனால் பாருங்க அப்பாவுடன் டான்ஸ் ஆடும்போது மகளுக்கு அப்படி ஒரு வெட்கம் வந்து விட்டது. சிரிப்புடன் தனது நடனத்தை நிறுத்தி விட்டு அப்பாவிடம் ஒட்டிக் கொண்டார். மகளின் வெட்கத்தைப் பார்த்து அப்பாவுக்கும் சிரிப்பு தாங்கலை.

மகளுடன் டான்ஸ்
இதுதொடர்பான வீடியோவுடன் அழகான கேப்ஷனையும் போட்டுள்ளார் ஷிகர் தவான். அதில். ஹேப்பி பர்த்டே எனது தேவதையே. எப்போதும் பிரகாசமான நட்சத்திரமாக ஜொலித்திரு. மின்னிக் கொண்டிரு. உன்னை மிஸ் செய்கிறேன். பத்திரமா இரு.. என்ஜாய் பண்ணு என்று மகளுக்கு வாழ்த்துகளையும், அறிவுரையையும் சேர்த்துக் கொடுத்துள்ளார் ஷிகர் தவான்.

குவிந்த வாழ்த்துகள்
இந்த அழகான பிறந்த நாள் கொண்டாட்டம் பலரையும் வசீகரித்துள்ளது. மகளுக்கும் அப்பாவுக்கும் வாழ்த்துகள் குவிந்துள்ளன. அலியாவும், அப்பாவின் நண்பர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டுள்ளார். அத்தோடு அவரும் தந்தைக்கு நன்றி சொல்லி மெசேஜ் போட்டுள்ளார். அதில், இந்த வீடியோவை தேர்வு செய்து போட்டதற்கு ரொம்ப நன்றி. லவ்யூ அப்பா.. மிஸ்யூ என்று கூறியுள்ளார் அலியா.

மிஸ் யூ மகளே
மிஸ்யூ என்று அப்பாவும், மகளும் போட்டிருப்பதைப் பார்த்தால், இருவருமே லாக்டவுன் காரணமாக வேறு வேறு இடங்களில் பிரிந்திருப்பதாக தெரிகிறது. முன்பு எடுத்த வீடியோவைத்தான் போட்டிருக்கிறார் ஷிகர் தவான் என்றும் புரிகிறது. கொரோனாவைரஸ் பரவல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை. அனைவருமே வீட்டோடுதான் உள்ளனர். ஷிகர் தவானும் தனது குடும்பத்தோடு தனித்திருக்கிறார்.

மகன், மனைவியுடன் ஜாலி வீடியோ
மனைவி ஆயிஷா, மகன் சொரோவாருடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக போய்க் கொண்டிருக்கிறது தவானின் பொழுது. மனைவியுடன் சேர்ந்து லூட்டி அடித்து வீடியோ போடுவது, மகனுடன் வீடியோ என ஜாலியாக போய்க் கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களிலும் இவரது வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் மகளுக்கும் வாழ்த்து சொல்லி வழக்கம் போல வீடியோ போட்டு கலக்கியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications