Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம பார்மில் தவான்.. ஆஸி. தொடருக்கு எப்படி தயார் ஆகுறாருன்னு பாருங்க?

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் குதிரையேற்றப் பயிற்சி செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இந்தியா அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள நிலையில், தவான் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கும் காட்சி வெளியாகி இருக்கிறது.

தவான் உடல்மொழி

தவான் உடல்மொழி

இந்திய துவக்க வீரர் தவான் "கப்பார்" என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அவரது முறுக்கேறிய உடல் மொழியும், கேட்ச் பிடித்து விட்டு தொடையை தட்டி காட்டுவதும் ஏற்கனவே இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

குதிரை ஏற்றம்

தான் குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டதாக தவான் ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் தவான் அனுபவசாலி போல குதிரை ஓட்டும் காட்சி இடம் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிப்ரவரி 24 முதல் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் நியூசிலாந்து தொடரில் பங்கேற்று ஓய்வில் இருக்கின்றனர்.

பேட்டிங் பார்ம்

பேட்டிங் பார்ம்

மீண்டும் தவான் உட்பட இந்திய வீரர்கள் களத்தில் இறங்க உள்ளனர். தவானை பொறுத்தவரை பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கிறார். ஆஸ்திரேலிய டி20 தொடரில் கலக்கலாக ஆடி 2 போட்டிகளில் 117 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய டி20 தொடர்

ஆஸ்திரேலிய டி20 தொடர்

அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பெரியளவில் சோபிக்கவில்லை. அந்த தொடரில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தார் தவான். இதன் சராசரி 18.33 மட்டுமே.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

அதன் பின் நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் மீண்டும் பேட்டிங்கில் கலக்கினார். இந்த தொடரில் 5 போட்டிகளில் 188 ரன்கள் எடுத்தார். இதன் சராசரி 47 ஆகும். அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலிய தொடரிலும் தவான் பேட்டிங்கில் கலக்கினால், உலகக்கோப்பைக்கு முன்னர் அது நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும்.

Story first published: Tuesday, February 19, 2019, 18:46 [IST]
Other articles published on Feb 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+