Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் வீரருக்கு தவான் அனுப்பிய 'வாவ்' செய்தி.. என்ன மனுசன்யா இவர்!

டெல்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கிற்கு தவான் டிவிட்டரில் போஸ்ட் ஒன்று போட்டுள்ளார். தவான் தற்போது தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் தொடர் விளையாட சென்று இருக்கிறார்.

அந்த நேரத்தில் கூட அவர் பாகிஸ்தான் வீரருக்கு மறக்காமல் டிவிட் செய்துள்ளார். இவரின் இந்த டிவிட்டை இருநாட்டு ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.

சமீப காலமாக தவான் டிவிட்டரில் எழுதும் அனைத்தும் வைரலாகி வருகிறது. முக்கியமாக அவர் நிறைய மனிதநேயமிக்க கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

பிரச்சனை

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கிற்கு காலில் அடிபட்டு இருக்கிறது. இதனால் ''கடவுளே நான் இப்போது நன்றாக இருக்கிறேன். என்னை தாக்கிய பந்துதான் இப்பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. உங்கள் அனைவருடைய அக்கறைக்கும், அன்பிற்கும் நன்றி.'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

மகிழ்ச்சி

இதற்கு பலரும் பதில் அளித்து இருந்தார்கள். இவர் ''அது மிகவும் மோசமான நிகழ்வு. நல்லவேளை இப்போதாவது உங்களுக்கு சரியானதே'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தவான்

இதற்கு தவான் தற்போது டிவிட் செய்துள்ளார். அதில் ''சோயப் மாலிக் நீங்கள் இப்போது நன்றாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சீக்கிரம் சரியான பின் விளையாட மீண்டும் திரும்புங்கள். உடலை பார்த்துக் கொள்ளுங்கள் '' என்று குறிப்பிட்டு இருந்தார்.

வைரல்

இதற்கு உலகம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி தெரிவித்து வருகிறார்கள். இவர் ''இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் கிரிக்கெட்டில் இருக்கும் ஒற்றுமை சந்தோசப்பட வைக்கிறது.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சூப்பர்

இவர் ''இப்படி ஒரு நல்ல குணம் இருப்பது மகிழ்ச்சியடைய வைக்கிறது. நன்றாக வாழுங்கள் ஷிகர் தவான்'' என்று கூறியுள்ளார்.

இந்தியர்

பாகிஸ்தானை சேர்ந்த இவர் ''நீங்கள் தான் உண்மையான இந்தியர் ஷிகர் தவான் '' என்று குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி பலரும் வரிசையாக இவரை பாராட்டி வருகிறார்கள்.

Story first published: Friday, January 19, 2018, 13:22 [IST]
Other articles published on Jan 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+