
சூப்பர் பீல்டர் தவான்
வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் வங்கதேசத்தை 173 ரன்களுக்குள் சுருட்டியது இந்தியா. அந்த போட்டியில் அருமையாக பீல்டிங் செய்த இந்தியாவின் தவான், நான்கு கேட்ச்கள் பிடித்தார். ஒருநாள் போட்டிகளில் ஒரு வீரர் பிடிக்கும் கேட்ச்களில் இது இரண்டாவது அதிகபட்ச கேட்ச் எண்ணிக்கை.

இது 41 பேர் பட்டியல்
உடனே, தவான் மட்டும் தான் இந்த சாதனையை செய்து இருக்கிறார் என்று நினைத்து விடாதீர்கள். தவானுக்கு முன்பு சுமார் 40 வீரர்கள் ஒரே ஒருநாள் போட்டியில் 4 கேட்ச்கள் பிடித்து இருக்கிறார்கள். அந்த நீண்ட பட்டியலில் 41வது வீரராக இணைந்துள்ளார் தவான். 4 கேட்ச்கள் பிடித்தவர்கள் அனைவருக்கும் இரண்டாம் இடம் மட்டுமே கிடைத்துள்ளது. அப்படியானால், அந்த முதல் இடம் யாருக்கு?

5 கேட்ச் பிடித்த ஒருவர்
பீல்டிங்கில் சிறந்த வீரர் என பெயர் எடுத்த தென்னாபிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் தான் ஒருநாள் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த கிரிக்கெட் வீரர். அவர் 5 கேட்ச்கள் பிடித்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், 4 கேட்ச் பிடித்தவர்கள் எண்ணிக்கை 41 என இருக்கையில், 5 கேட்ச் பிடித்தவர்களில் ஜான்டி ரோட்ஸ் மட்டுமே தனி ஆளாக இருக்கிறார். அவர் 1993இல் மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த சாதனையை படைத்துள்ளார்.

4 கேட்ச்கள் பிடித்த இந்தியர்கள்
4 கேட்ச்கள் பிடித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் கவாஸ்கர், அசாருதீன், டெண்டுல்கர், டிராவிட், முஹம்மது கைஃப், விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரோடு வங்கதேச போட்டியில் 4 கேட்ச்கள் பிடித்த ஷிகர் தவான் இருக்கிறார்கள். கடைசியாக விவிஎஸ் லக்ஷ்மன் 2004இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 4 கேட்ச்கள் பிடித்தார். அதன் பின் நீண்ட காலம் கழித்து தவான் அந்த பட்டியலில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications