Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“யப்பா இப்படி ஒரு டேர்னா”.. இந்தாண்டின் மிகச்சிறந்த பவுலிங்.. மிரளவைத்த இந்திய வீராங்கனை - வீடியோ

க்யூண்ஸ்லாண்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய வீராங்கனை ஷிகா பாண்டே வீசிய பந்து அனைவரையும் வாயை பிளக்கவைத்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஏற்கனவே ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலிய அணி 2 - 1 என கைப்பற்றிவிட்டது. டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துவிட்டது.

டி20 தொடர்

தற்போது இரு அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 118 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பூஜா வஸ்ட்ரகார் 37 ரன்கள் விளாசினார்.

ஷீகா பாண்டே பந்துவீச்சு

ஷீகா பாண்டே பந்துவீச்சு

இதன் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த போதும் ரன்களை சேர்த்துக்கொண்டே வந்தது. இதனால் 19.1 ஓவர்களிலேயே அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற போதும், இந்திய அணியின் பவுலர் ஷீகா பாண்டே அனைவரின் மனதையும் வென்றுள்ளார்.

அதிசய பந்து

அதிசய பந்து

ஆட்டத்தின் முதல் ஓவரை ஷீகா பாண்டே வீசிய மறுமுணையில் ஆஸ்திரேலியாவின் ஐசா ஹெலி பேட்டிங் செய்தார். இந்த ஓவரில் தான் அந்த அதிசயம் நடந்தது. ஷீகா அவுட்சைட் ஆஃப் திசையில் வீசிய பந்தை ஹெலி தடுப்பாட்டம் ஆட முயன்றார். ஆனால் பந்து தீடீரென நல்ல டேர்ன் ஆகி மிடில் ஸ்டம்பில் பட்டது. இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை, இரு அணி வீரர்களுக்குமே இது படு ஆச்சரியமாக இருந்தது.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

அவுட்சைட்டில் போடப்பட்ட பந்து இவ்வளவு தூரம் டேர்னாகி ஸ்டம்பில் பட்டதா என ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் உண்மையிலேயே அப்படிபட்ட சம்பவம் தான் நிகழ்ந்தது. இதனால் இந்த ஆண்டின் சிறந்த பந்துவீச்சு இதுதான் என சமூகவலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து ட்வீட் போட்டுள்ள முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் இந்த பந்துவீச்சுக்கு தலை வணங்குகிறேன் எனக்கூறியுள்ளார்.

Story first published: Sunday, October 10, 2021, 9:23 [IST]
Other articles published on Oct 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+