Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்வி நிறைய கத்துக் கொடுத்துருக்கு... திரும்ப வந்து அடிப்போம்... ஷ்ரேயாஸ் ஐயர் உறுதி

துபாய் : நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடி டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்றுள்ளது. 14 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இருந்தபோதிலும் பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி படிப்பினைகளை கற்றுக் கொடுத்துள்ளதாகவும், அடுத்த போட்டியில் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு வெற்றி பெறுவோம் என்றும் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் பட்டியலில் முதலிடம்

ஐபிஎல் பட்டியலில் முதலிடம்

ஐபிஎல்லின் இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுடன் முதல் 3 இடங்களுக்கு மட்டுமே போட்டியிட்டு வருகிறது. 10 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அணியின் பின்னடைவு

அணியின் பின்னடைவு

இந்நிலையில், ஐபிஎல்லின் 38வது போட்டியில் நேற்றைய தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதிய டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. தொடர் வெற்றிகளை பெற்று வந்த அந்த அணிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஷிகருக்கு ஐயர் பாராட்டு

ஷிகருக்கு ஐயர் பாராட்டு

இதற்கும் மேலாக அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் இரண்டு சதங்களை அடித்து கொடுத்துள்ளார். அந்த அணியின் இந்த தோல்வி மூலம் அவரது அதிரடி சதம் வீணாகியுள்ளது. இந்நிலையில், ஷிகர் தவான் போட்டியின் சூழலை புரிந்து விளையாடியதாக ஐயர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வலிமையுடன் விளையாடுவோம்

வலிமையுடன் விளையாடுவோம்

போட்டியில் அதிகப்படியாக 10 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றிக்கு உபயோகப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ள ஐயர், இந்த போட்டியின் தோல்வி பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளதாகவும், இதன் இடைவெளிகளை நிரப்பி அடுத்த போட்டியில் மேலும் வலிமையாக போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, October 21, 2020, 13:46 [IST]
Other articles published on Oct 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+