For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு பெண் 2 முறை விவாகரத்து செய்தால் என்ன தவறு? ஷிகர் தவானை பிரிந்த ஆயீஷா - குவியும் ஆதரவு

மும்பை: ஷிகர் தவான் தனது மனைவி ஆயீஷாவை விவாகரத்து செய்துள்ளது தான் இப்போது சமூக தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. (இதுல என்னய்யா விவாதம்!?)

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ஷிகர் தவானுக்கு, டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்குமா என்று நேற்று வரை விவாதித்துக் கொண்டிருந்த சோஷியல் மீடியா களம், இப்போது அதனை மறந்து அவரது பெர்சனல் வாழ்க்கையை விவாதித்துக் கொண்டிருக்கிறது.

காரணம், அனைவரையும் வியக்க வைத்த அவரது திருமணமும், இப்போது ஏற்பட்டிருக்கும் பிரிவுமே. அந்த அளவுக்கு, இந்த ஜோடி ரசிகர்களை கவர்ந்திருந்தது.

 2012ல் திருமணம்

2012ல் திருமணம்

மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்ட ஆயிஷா, தனது 11வது வயதின் போதே பெற்றோருடன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு குடிபெயர்ந்து விட்டார். அங்கு ஒரு தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனையாகவும் வலம் வந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்த ஆயிஷா, அவரை 2012ம் ஆண்டு விவாகரத்து செய்து ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் சோராவர் எனும் மகன் உள்ளார்.

 ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

ஆயிஷாவை முகநூலில் முதன் முதலில் பார்த்து பிறகு அறிமுகமாகி காதல் வயப்பட்டு திருமணம் செய்ய முடிவெடுத்த தவான், பெரும் போராட்டத்திற்கு பிறகு தனது பெற்றோரை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார். ஆனால், இவர்களது எட்டு வருட திருமண வாழ்க்கை இப்போது முடிவுக்கு வந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவான், இதுகுறித்து இதுவரை வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. ஆனால், ஆயீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 தவறு செய்வதாக உணர்ந்தேன்

தவறு செய்வதாக உணர்ந்தேன்

அதில், "நான் 2 முறை திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் வரை "விவாகரத்து" ஒரு மோசமான வார்த்தை என கருதினேன். முதல் முறையாக நான் விவாகரத்து செய்தபோது நான் மிகவும் பயந்தேன். நான் தோல்வியடைந்ததாக உணர்ந்தேன், அந்த நேரத்தில் நான் ஏதோ தவறு செய்வதாக உணர்ந்தேன். நான் அனைவரையும் ஏமாற்றியது போல் உணர்ந்தேன், சுயநலத்தையும் உணர்ந்தேன். நான் என் பெற்றோரை ஏமாற்றியது போல் உணர்ந்தேன், நான் என் குழந்தைகளை ஏமாற்றியது போல் உணர்ந்தேன். கடவுளையும் வீழ்த்துவது போல் உணர்ந்தேன். விவாகரத்து என்பது அவ்வளவு மோசமான வார்த்தையாக இருந்தது.

 வேதனை பதிவு

வேதனை பதிவு

இப்போது கற்பனை செய்து பாருங்கள், நான் இரண்டாவது முறையாக மீண்டும் விவாகரத்து வாங்க வேண்டும். அது இன்னும் திகிலூட்டுகிறது. ஏற்கனவே ஒரு முறை விவாகரத்து பெற்றதால், நான் இரண்டாவது முறையாக அதிக ஆபத்தில் இருப்பது போல் உணர்ந்தேன். நான் நிரூபிக்க இன்னும் நிறைய இருந்தது. அதனால் எனது இரண்டாவது திருமணம் முறிந்தபோது மிகவும் பயமாக இருந்தது. இதற்கு எனக்கு என்ன அர்த்தம்? இது என்னையும் என் திருமண உறவையும் எப்படி வரையறுக்கிறது?" என்று தனது வேதனையை கொட்டித் தீர்த்துள்ளார்.

 ஆயீஷா மீது விமர்சனம்

ஆயீஷா மீது விமர்சனம்

இதில், தவான் - ஆயீஷாவை விட்டுவிடுவோம்.. முதல் கணவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தவானுக்கு ஒரு பையன் இருக்கிறான். இவர்களின் நிலை என்ன? என்பதே, வேதனையாக உள்ளது. இதில் யாரை என்ன குற்றம் சொல்ல முடியும்? இது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை. இதற்காக தவானை விமர்சிப்பதும் சரி அல்ல.. ஆயீஷாவை கிண்டல் செய்வதும் மிக தவறான செயல். சமூக தளங்களில் ஆயீஷாவை கிண்டல் செய்வதை அதிகம் காண முடிகிறது. அவர் பெண் அல்லவா.. அப்படித்தான் விமர்சிப்பார்கள். இந்த இக்கட்டான நேரத்தில், வெளியில் இருந்து வரும் எந்த புற கருத்துக்களையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், ஆயீஷா மீண்டு வர வேண்டும் என்பதே நமது எண்ணம். அதேபோல், தவானுக்கும் தனக்கு பிடித்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கான அனைத்து உரிமையும் உள்ளது. ஸோ, இருவருக்கும் வாழ்த்துகள்.

Story first published: Wednesday, September 8, 2021, 12:12 [IST]
Other articles published on Sep 8, 2021
English summary
Shikhar Dhawan divorced Aesha 8 Years of Marriage - தவான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+