Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கடைசி நேரத்தில் எடுத்த முடிவு; ஆட்டத்தையே மாற்றியது”.. இந்தியாவின் த்ரில் வெற்றி.. தவான் விளக்கம்

ட்ரினிடாட்: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போதும், ஏமாற்றமாகவே இருப்பதாக கேப்டன் ஷிகர் தவான் கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 308 ரன்களை குவித்தது.

மிஸ்ஸான சதம்

மிஸ்ஸான சதம்

தொடக்க வீரர்களான கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர். பொறுப்பாக விளையாடிய தவான் 99 பந்துகளில் 97 ரன்களை அடித்து சதத்தை தவறவிட்டார். இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய சுப்மன் கில் 53 பந்துகளில் 64 ரன்களை சேர்த்தார். இதன்பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களும், தீபக் ஹூடா 27 ரன்களும் விளாச இந்திய அணி கடினமான இலக்கை நிர்ணயித்தது.

கடைசி நேர ஆட்டம்

கடைசி நேர ஆட்டம்

இதன்பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓப்பனிங் வீரர் சாய் ஹோப் 7 ரன்களுக்கு நடையை கட்டினார். எனினும் முதல் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கெயில் மேயர்ஸ் (75), சமார் ப்ரூக்ஸ் (46) என அடிக்க, அந்த அணி வெற்றிக்கு அருகில் வந்தது. எனினும் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட சூழலில் 10 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஷிகர் தவானுக்கு ஆட்ட நாயகன் விருதும் அளிக்கப்பட்டது.

தவான் வருத்தம்

தவான் வருத்தம்

இந்த வெற்றி குறித்து பேசிய ஷிகர் தவான், இந்த களத்தில் சதமடிக்காதது பெரும் வருத்தமாக உள்ளது. எனினும் இந்திய அணி கடின முயற்சியை மேற்கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. கடைசி நேரத்தில் சற்று பதற்றமாக இருந்தது. அதுபோன்று போட்டி மாறும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. எனினும் எந்தவித பதற்றமும் இல்லாமல் ஒரே ஒரு சிறிய மாற்றத்தை செய்தது பலனை கொடுத்தது.

மாற்றம் என்ன

மாற்றம் என்ன

கடைசி நேரத்தில் ஃபைன் லெக் ஃபீல்டரை சற்று பின்னுக்கு தள்ளினோம். அந்த ஆலோசனை எங்களுக்கு பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. இதன் மூலம் அடுத்த போட்டிகளையும் எதிர்கொள்வதற்கு எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என ஷிகர் தவான் கூறியுள்ளார்.

Story first published: Saturday, July 23, 2022, 11:50 [IST]
Other articles published on Jul 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+