Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இத கூட யோசிக்கலையே நீங்க” எதிரணி கேப்டனை சீண்டிய தவான்.. 2வது ஒருநாள் போட்டியில் சுவாரஸ்ய நிகழ்வு!

ராஞ்சி: தென்னாப்பிரிக்க அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து கேப்டன் ஷிகர் தவான் கூறியுள்ளார்.

முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற சூழலில், இரு அணிகளும் மோதிய 2வது ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. எனினும் 278 என்ற நல்ல ஸ்கோரை அடித்த போதும் வெற்றி பெற முடியவில்லை.

தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ்

தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ்

அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் டிகாக் (5), ஜென்னிமான் மாலன் (25) என அடுத்து வெளியேற பின்னர் வந்த ஹெண்ட்ரிக்ஸ் (74), எய்டன் மர்க்ரம் (79) ரன்களை அடித்து அசத்தினர். பின்னர் டேவிட் மில்லர் தனது பங்கிற்கு 35 ரன்களை விளாச ஸ்கோர் மலமலவென உயர்ந்தது. எனினும் கடைசி நேரத்தில் சில விக்கெட்கள் எடுக்க 50 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 278 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சிராஜ் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்தியாவின் இன்னிங்ஸ்

இந்தியாவின் இன்னிங்ஸ்

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி இந்த முறையும் டாப் ஆர்டர் சொதப்பல் தான் ஷிகர் தவான் (13), சுப்மன் கில் (28) என ஏமாற்றினர். இந்தியா சரிந்துவிடுமா என கவலைப்பட்ட போது, இஷான் கிஷான் - ஸ்ரேயாஸ் ஜோடி காப்பாற்றினர். சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் (93), ஸ்ரேயாஸ் ஐயர் (113) ரன்களை அடித்தனர். கடைசியில் சஞ்சு சாம்சன் 30 ரன்கள் அடிக்க இந்திய அணி 45.5 ஓவர்களில் 282/3 ரன்களை எடுத்து வெற்றி கண்டது.

தவான் விளக்கம்

தவான் விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து கேப்டன் ஷிகர் தவான் விளக்கம் அளித்துள்ளார். அதில், எங்களின் திட்டம் சரியாக நடந்துவிட்டது. இங்கு பனிப்பொழிவு இருக்கும் என கணித்தேன். நான் நினைத்த நேரத்தில் சரியாக பனிப்பொழிவு வந்தது. எனவே டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த எதிரணி கேப்டனுக்கு நன்றி என சிரித்துக்கொண்டே கூறினார்.

திட்டம் இதுதான்

திட்டம் இதுதான்

தொடர்ந்து பேசிய அவர், ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் அடித்து ஆட வேண்டும் என்பது தான் திட்டம். ஏனென்றால் மிடில் ஓவர்களில் அதிரடி காட்டுவது சிரமம். எனினும் பனிப்பொழிவு வந்து பணியை சுலபமாக்கியது. இஷான் மற்றும் ஸ்ரேயாஸ் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பவுலிங்கில் அனைவரும் இளம் வீரர்களாக இருந்த போதும், பக்குவமாக கையாண்டு ரன்களை கட்டுப்படுத்தியது பெருமையாக உள்ளது என ஷிகர் தவான் கூறியுள்ளார்.

Story first published: Monday, October 10, 2022, 6:43 [IST]
Other articles published on Oct 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+