Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த இருவருமே சரியில்லங்க.. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி.. ஷிகர் தவான் அதிருப்தி!

லக்னோ: தென்னாப்பிரிக்கா அணியுடனான தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது.

மழை பாதிப்பு காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட சூழலில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜென்னிமேன் மாலன் 22 ரன்களும், டிகாக் 48 ரன்களும் எடுத்த போதும், பின்னர் வந்த வீரர்கள் சொதப்பினர். கேப்டன் பவுமா (8), எய்டன் மர்க்ரம் (0) என அடுத்தடுத்து வெளியேறியதால் 110/4 என தடுமாறியது. எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த க்ளாசென் (74) - டேவிட் மில்லர் (75) ஜோடி அட்டகாசமாக விளையாடினர். இடையே இந்திய வீரர்கள் கேட்ச்-களை தவறவிட்டது அவர்களுக்கு சாதகமாக மாறியது. இதனால் 40 ஓவர்களில் அந்த அணி 249/4 ரன்களை குவித்தது.

 தொடக்கமே அவுட்

தொடக்கமே அவுட்

கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி இருந்தது. கேப்டன் தவான் (4) மற்றும் சுப்மன் கில் (3) வெளியேறினர். பின்னர் வந்த ருதுராஜ் கெயிக்வாட் (19), இஷான் கிஷான் (20) என அடுத்தடுத்து ஏமாற்றினர். எனினும் பொறுப்புடன் ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் (50), சஞ்சு சாம்சன் (86) மற்றும் ஷர்துல் தாக்கூர் (33) இந்திய அணியை இலக்கு அருகே கொண்டு சென்றனர். எனினும் 40 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தவான் விளக்கம்

தவான் விளக்கம்

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து ஷிகர் தவான் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில், நாங்கள் நிறைய ரன்களை தேவையின்றி வாரி வழங்கினோம் என நினைக்கிறேன். வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவீச்சாளர்கள் இரு பிரிவுமே சரியில்லை. இதே போல ஃபீல்டிங்கும் மோசமாக இருந்துவிட்டது. இதில் இருந்து பாடம் கற்றுள்ளோம் எனக்கூறினார்.

பெருமை

பெருமை

தொடர்ந்து பேசிய அவர், பேட்டிங்கை பொறுத்தவரையில் நமது வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். எங்களுக்கு பேட்டிங்கில் சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. எனினும் ஸ்ரேயாஸ், சாம்சன் மற்றும் ஷர்துல் போராடிய விதம் சிறப்பாக இருந்தது. தவறுகளை சரிசெய்துக்கொண்டு சிறப்பாக வருவோம் என தவான் கூறினார்.

Story first published: Friday, October 7, 2022, 6:56 [IST]
Other articles published on Oct 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+