Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மைதானத்தில் நின்றபோது அழைத்த மகன்.. கண்ணீர் சிந்திய தவான்...நெகிழ்ச்சி வீடியோ!

டெல்லி: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்றது. தாவனின் அதிரடியான 68 ரன்களால் இந்தியா எளிதாக வென்று ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாடப்பட்டபோது போது டிவியில் ஷிகர் தவானை பார்த்த அவரது மகன் சந்தோசத்தில் கத்தியிருக்கிறான். தற்போது அந்த அழகான நிகழ்வு வீடியோவாக வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள ஷிகர் தவான் மிகவும் உருக்கமாக அவரது மகன் குறித்து எழுதி இருக்கிறார். இந்த போஸ்ட்டுக்கு இந்திய அணி வீரர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

 மீண்டும் பார்முக்கு திரும்பிய தவான்

மீண்டும் பார்முக்கு திரும்பிய தவான்

இந்தியா அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்றது. 231 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடிய இந்த போட்டியில் வரிசையாக இந்திய பிளேயர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அவுட் ஆகி வந்தனர். இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவான் அதிரடியாக ஆடினார். இவரது அதிரடியான 68 ரன்களால் இந்தியா எளிதாக வென்று ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது. இதில் இவரது இரண்டு சிக்ஸுகளும் அடக்கம். இதன் மூலம் சில போட்டிகளாக பார்மில் இல்லாமல் தவித்து வந்த இவர் மீண்டும் பார்முக்கு திரும்பி இருக்கிறார்.

 தவான் மகனின் வீடியோ

தவான் மகனின் வீடியோ

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதத்திற்காக இந்திய அணி வீரர்கள் வரிசையில் நின்றனர். அவர்கள் வரிசையாக நின்ற போது டிவியில் ஷிகர் தவானை பார்த்த அவரது மகன் 'ஸோரோவர்' சந்தோசத்தில் கத்தியிருக்கிறான். இதை வீடியோவாக பதிவு செய்த அவரது மனைவி தவானிடம் போட்டி முடிந்த பின் காட்டி இருக்கிறார். தற்போது அந்த அழகான நிகழ்வு இணையத்தில் வீடியோவாக வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

உணர்ச்சிவசப்பட்ட தவான்

இந்த நிலையில் தவான் அந்த வீடியோவை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார். மேலும் அதில் "இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. என் மகன் என்னை தேடுவதை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது. அவன்தான் எனக்கு எல்லாமே" என உணர்ச்சிகரமாக எழுதி இருக்கிறார்.

 தவானுக்கு ரோஹித் பதில்

தவானுக்கு ரோஹித் பதில்

இந்த நிலையில் இந்த போஸ்ட்டுக்கு இந்திய அணி வீரர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதில் இந்திய அணியின் தொடக்க வீரரும், ஷிகர் தவானின் பார்ட்னரும் ஆன ரோஹித் சர்மா "ரொம்ப உணர்ச்சிவசப்படாதிங்க ப்ரோ'' என்று எழுதியிருக்கிறார். அதற்கு தவான் பதில் கூறும் விதமாக "இந்த வீடியோவை பார்த்துவிட்டு என்னால் உணர்ச்சிவச படாமல் இருக்க முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்.

Story first published: Friday, October 27, 2017, 18:56 [IST]
Other articles published on Oct 27, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+