Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்னத்தங்க கொண்டு போக போறோம்”.. கேப்டன்சியில் பிசிசிஐ செய்த துரோகம்.. ஷிகர் தவான் ஆதங்கம்!

ஆக்லாந்து: இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு செய்யப்படும் துரோகங்கள் குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி கண்டது. இதனையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை ஆக்லாந்தில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஷிகர் தவான் தான் கேப்டனாக செயல்படவுள்ளார்.

 கேப்டன்சி மாற்றம்

கேப்டன்சி மாற்றம்

ஆனால் ஷிகர் தவான் எப்படி கேப்டன்சி பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவருக்கு சரிவர வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும், கேப்டன்சி விவகாரத்தில் அசிங்கப்படுத்தப்பட்டது. ஆசிய கோப்பைக்கு முன்பாக ஜிம்பாப்வுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரில் பங்கேற்றது. இதில் தவான் தான் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

இறுதிகட்ட மாற்றம்

இறுதிகட்ட மாற்றம்

போட்டிக்கான ஏற்பாடுகள் கடைசி கட்டத்தை எட்டிய நேரத்தில் திடீரென கே.எல்.ராகுல் அணிக்குள் சேர்க்கப்பட்டு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதனால் தவான் ஏமாற்றமடைந்தார். இதுபோன்ற ஏமாற்றத்திற்கு பிறகு அவர் நியூசிலாந்து தொடருக்கு கேப்டனகா பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடாது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கு தவான் பதிலளித்துள்ளார்.

ஷிகர் தவான் பதில்

ஷிகர் தவான் பதில்

இதுகுறித்து பேசிய அவர், சரியான கேள்விகள் தான். ஆனால் கேப்டனாக செயல்படுவதில் நான் பெருமை தான் படுகிறேன். இந்திய அணியின் துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் தான். அவரை ஆசிய கோப்பைக்கு சிறப்பாக அனுப்புவதைதான் நான் யோசித்துக்கொண்டு இருந்தேன். ஒருவேளை ரோகித் காயமடைந்தால், கே.எல்.ராகுல் தான் வழிநடத்த வேண்டும். அதனால் தான் ஜிம்பாப்வே தொடரில் அவர் கடைசி நேரத்தில் கேப்டனானார்.

எதுவும் கொண்டு செல்வதில்லை

எதுவும் கொண்டு செல்வதில்லை

ஜிம்பாப்வே தொடரில் பயிற்சி பெறுவது தான் முக்கியம். இதனால் எனக்கு எந்தவித வருத்தமுமே இல்லை. இந்த உலகத்தில் யாரும் வரும்போது எதையும் கொண்டு வருவதில்லை, எதையும் கொண்டு போகப்போவதும் இல்லை. குறிப்பிட்ட சில நாட்களில் கிடைப்பவை தான். அதன்பின்னர் எனக்கு தென்னாப்பிரிக்க தொடரில் கேப்டன்சி வாய்ப்பு கிடைத்தது என ஷிகர் தவான் கூறினார்.

Story first published: Thursday, November 24, 2022, 19:42 [IST]
Other articles published on Nov 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+