நாம ஜெயிச்சிட்டோம் மாறா.. முதல் ஒருநாள் போட்டி.. ரசிகர்களுக்கு தவான் கொடுத்த சர்ப்ரைஸ்.. இத்தனை பேரா
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ரசிகர்கள் வைத்த அத்தனை கோரிக்கைகளையும் தவான் நிறைவேற்றியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் பேசிய ஷிகர் தவான் தான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.

அணி விவரம்
இந்திய அணியின் ஓப்பனிங்கில் வழக்கம் போல கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில் ஆகியோர் களமிறங்குகின்றனர். மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என ரசிகர்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஒருபுறம் தொடர்ச்சியாக சொதப்பும் பண்ட், மறுபுறம் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஆடும் சஞ்சு சாம்சன் என அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வந்தது. இந்நிலையில் இறுதியில் இன்று சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பை கொடுத்துள்ளார் ஷிகர் தவான்.

ரிஷப் பண்ட் நிலைமை
இதற்காக ரிஷப் பண்ட் நீக்கப்பட்டுவிடவில்லை. அவரையும் மிடில் ஆர்டரில் இணைத்துள்ளார். இதே போல சூர்யகுமார் யாதவுக்கு 50 ஓவர் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து வாய்ப்பு தர வேண்டும் என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதற்கும் பலன் கிடைத்துள்ளது. முதல் விக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் ஐயரும், 2வது விக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவ் களமிறங்க, மிடில் ஆர்டரில் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் விளையாடுகின்றனர்.

ஆல்ரவுண்டர்களின் இடம்
இந்திய அணியின் லோயர் ஆர்டரில் சிறப்பான இரண்டு ஆல்ரவுண்டர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சு சார்பில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வேகப்பந்துவீச்சு சார்பில் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இணைந்துள்ளனர். முழு நேர ஸ்பின்னராக யுவேந்திர சாஹல் களமிறங்குகிறார்.

உம்ரானுக்கு வாய்ப்பு
இந்த போட்டியிலாவது இளம் வீரர் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. அதனை ஷிகர் தவான் நிறைவேற்றியுள்ளார். உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகின்றனர். இதனால் தீபக் சஹாருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

ப்ளேயிங் 11
ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுவேந்திர சாஹல்


Click it and Unblock the Notifications