Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் கிரிக்கெட் விளையாடினது ரொம்பவே சிறப்பானது... ஷிகர் தவான் பாராட்டு

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை விளையாடியது மிகவும் சிறப்பானது என்று டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஷிகர் தவான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

யூஏஇயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பயிற்சியாளர்கள், சக வீரர்கள், நிர்வாகம் மற்றும் ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Shikhar Dhawan Grateful To Play Cricket Again, Hails Fantastic Delhi Capitals Staff

ஐபிஎல் 2020 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டுள்ளது. ஆயினும் அந்த அணி இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்தே முதல் 3 இடங்களில் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது. சில போட்டிகளில் தடுமாறினாலும் சிறப்பான போட்டிகளை தொடர் முழுவதிலும் தந்துள்ளது டெல்லி அணி.

இந்நிலையில் அந்த அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை விளையாடும் வாய்ப்பை அளித்த ஐபிஎல் தொடருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். தன்னுடைய அணியின் சிறப்பான வீரர்களால் இந்த தொடர் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த தொடரை சிறப்பாக அமைத்துக் கொடுத்த அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள், மற்றும் சக வீரர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, November 12, 2020, 11:55 [IST]
Other articles published on Nov 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+