Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி.. கிரிக்கெட் ஸ்டார்களும் வாழ்த்துறாங்கப்பா!

மும்பை : வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Recommended Video

ஹோலி பண்டிகை கொண்டாட்டம்..வண்ணப்பொடிகளை பூசி உற்சாகம்!- வீடியோ

இந்நிலையில் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் நாட்டு மக்களுக்கு தங்களுடைய ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

ஷிகர் தவான், ஹர்பஜன் சிங் மற்றும் தீபக் சஹர் போன்ற வீரர்கள் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின்மூலம் தங்களது ஹோலி கொண்டாட்டங்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.

நாடு முழுவதும் கோலாகலம்

நாடு முழுவதும் கோலாகலம்

வண்ணங்களின் திருவிழாவாகவும், வசந்த காலத்தை வரவேற்கும் திருவிழாவாகவும் போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையையொட்டி, வடமாநிலங்களில் ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசி மகிழ்ந்தனர். தற்போது தென்னந்தியாவிலும், இந்த கலாச்சாரம் வரவேற்பை பெற்று வருகிறது.

மக்களுக்கு வாழ்த்து

மக்களுக்கு வாழ்த்து

இந்நிலையில் இந்த கலர்புல் கொண்டாட்டத்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தங்களின் விருப்பத்திற்குரியவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அவர்கள் தங்களது ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடியதுடன், ரசிகர்களுக்கும் ஹோலி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

ஹோலிக்கு ஹர்பஜன் வாழ்த்து

முன்னாள் இந்திய அணியின் ஆப்-ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், தன்னுடைய குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய குடும்பத்தினருடனான தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஹேப்பி ஹோலி என வாழ்த்து

எதிர்வரவுள்ள தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ள ஷிகர் தவானும் தன்னுடைய ஹோலி வாழ்த்துக்களை டிவிட்டர் மூலம் பகிர்ந்துள்ளார். தவானும் தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

ஹோலி வாழ்த்து

இந்நிலையில் வரும் 29ம் தேதி துவங்கவுள்ள ஐபிஎல் 2020 தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஹர்பஜன் சிங்குடன் இணைந்து விளையாடவுள்ள தீபக் சஹரும் ஹோலி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். வண்ணங்களின் திருவிழாவையொட்டி, அவர் தான் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Story first published: Tuesday, March 10, 2020, 12:46 [IST]
Other articles published on Mar 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+