Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உன்னை பார்க்க முடியவில்லை என்றாலும், என் இதயத்தில் தான் இருக்கிறாய்.. மகனுக்காக ஷிகர் தவான் உருக்கம்

மெல்போர்ன் : பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அவருடைய மனைவி ஆயிஷா முகர்ஜியும் விவாகரத்து பெற்ற நிலையில் தன்னுடைய மகன் ஜோராவிற்கு தந்தை ஷிகர் தவான் உருக்கமான பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார். தவான் கிரிக்கெட்டில் வளர்ந்து வந்தபோது ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணை ஆஸ்திரேலியாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆயிஷா முகர்ஜி ஏற்கனவே விவாகரத்து ஆன நிலையில் ஷிகர் தவான் அவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஜோராவர் தவான் என்ற 10 வயதில் மகன் இருக்கிறார்.இந்த நிலையில் தவானுக்கும் ஆயிஷா முகர்ஜிக்கும் விவாகரத்து பெற்றதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

shikhar dhawan ind vs aus shikhar dhawan divorce

ஜோராவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அவருக்கு பத்து வயது தான் ஆகிறது என்பதால் அவர் தாயுடன் தற்போது வசித்து வருகிறார். இதனால் தனது மகனை பார்க்க முடியாத வருத்தத்தில் தவான் உள்ளார். இந்த நிலையில் ஜோராவர் தவானின்பிறந்த நாளுக்கு தவான் உருக்கமான வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.

அதில், நீ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், உன்னிடம் என்னால் பேசவே முடியாமல் இருந்தாலும் நீ எப்போதுமே என்னுடைய இதயத்தில் தான் இருக்கிறாய். இந்த பிறந்தநாளில் உனக்கு அன்பும் மகிழ்ச்சியும் நிரம்பட்டும் என் அன்பு மகனே என்று ஷிகர் தவான் வாழ்த்து கூறியிருக்கிறார். ஷிகர் தவானின் இந்த பதிவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தவான் ஓய்வு பெற்றார்.

ஐபிஎல் தொடரிலும் இனி நல்ல இடம்பெற மாட்டேன் என ஷிகர் தவான் அறிவித்திருக்கிறார். தவான் தற்போது இந்தியாவில் இருக்கிறார். மேலும் நீதிமன்ற உத்தரவின் படி அவருடைய முன்னாள் மனைவி ஆயிஷா முகர்ஜி, மகனை ஷிகர் தவானை சந்திக்க அழைத்து வருவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தனது மகனிடம் தொலைபேசியில் பேசுவதற்காகவது ஆயிஷா முகர்ஜி அனுமதி அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Friday, December 27, 2024, 12:40 [IST]
Other articles published on Dec 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+