For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு இடத்துக்கு 3 பேர் கடும் போட்டி.. முதல் ஒருநாள் போட்டிக்கான ப்ளேயிங் 11.. சிக்கலில் ஷிகர் தவான்!!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸுடனான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஓப்பனிங்கே குழப்பமாக உள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 5 டி20 போட்டி தொடர்களில் பங்கேற்றுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை குயின்ஸ் பார்க் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

முதல் ஒருநாள் ஆட்டம்

முதல் ஒருநாள் ஆட்டம்

இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைமையில் மீண்டும் ஒரு புதிய அணி உருவாக்கப்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இதற்கான ப்ளேயிங் 11 தான் எப்படி இருக்கும் என குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஓப்பனிங்கில் யார்

ஓப்பனிங்கில் யார்

இந்திய அணியின் ஓப்பனிங்கில் ஷிகர் தவானுடன் களமிறங்க 3 தேர்வுகள் உள்ளன. இளம் வீரர்களான ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில், இஷான் கிஷான் என மூன்று பேரையுமே பிசிசிஐ அணிக்குள் சேர்த்துள்ளது. ரோகித் சர்மா இருந்திருந்தால் இஷான் கிஷானுக்கு தான் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் தற்போது அவர் இல்லை என்பதால் யாருக்கு வாய்ப்பு என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

யார் சிறந்த வீரர்

யார் சிறந்த வீரர்

முதல் தர ஒருநாள் கிரிக்கெட்டில் இஷான் கிஷான் 36.6 ரன்கள் சராசரி மற்றும் 92.2 ஸ்ட்ரைக் ரேட்டுடன் பின் தங்கியுள்ளார். இதே போல சுப்மன் கில் 44.9 சராசரியுடன் 88.1 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருக்கிறார். ஆனால் ருதுராஜ் கெயிக்வாட் இவர்களை மிஞ்சியுள்ளார். 100.1 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ள ருதுராஜ் 54.7 ரன்களை சராசரியாக அடித்துள்ளார். இதனால் அவர் மீது ராகுல் டிராவிட்டிற்கு தனி கவனம் உள்ளது.

டிராவிட்டின் திட்டம்

டிராவிட்டின் திட்டம்

ராகுல் டிராவிட்டை பொறுத்தவரை இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு தர வேண்டும் என நினைப்பவர். எனவே அணியின் ப்ளேயிங் 11ல் மாற்றம் கொண்டு வந்து ருதுராஜ் கெயிக்வாட் அல்லது சுப்மன் கில்லை ஓப்பனிங்கிற்கும், இஷான் கிஷானை மிடில் ஆர்டருக்கும் களமிறக்க வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, July 21, 2022, 13:16 [IST]
Other articles published on Jul 21, 2022
English summary
India playing 11 for 1st ODI against West Indies ( இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டி ) வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11ஐ தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+