
குட்டி கோலி
இதே போன்று, அடுத்த இந்திய அணி கேப்டனாக கருதப்படும் குட்டி கோலி என்று ரசிகர்களால் கிண்டல் செய்யப்படும் கே எல் ராகுல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடரில் முதலில் களம் இறங்கவில்லை. இந்த நிலையில் தமது முழு உடல் தகுதியை எட்டிய ராகுல் பெங்களூருவில் நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

அதிரடி மாற்றம்
இதனை அடுத்து கே எல் ராகுல் இந்திய அணியின் கேப்டனாக ஜிம்பாப்வே தொடருக்கு அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே கேப்டனாக இருந்த ஷிகர் தவான் தற்போது துணை கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கே எல் ராகுல் ஏன் அவசர அவசரமாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதற்கு சில காரணங்கள் உள்ளன.

வாய்ப்பு ஏன்
இந்திய அணியின் முக்கியமான வீரராக கேஎல் ராகுல் கருதப்படுகிறார். ஆனால் அவர் கடந்த இரண்டரை மாதங்களாக எந்த வித கிரிக்கெட் போட்டியிலும் காயம் காரணமாக விளையாடவில்லை.இதனால் அவருக்கு பயிற்சி வேண்டும் என்பதால் ஜிம்பாப்வே தொடரில் அவரது பழைய பார்மை மீட்க பிசிசிஐ வாய்ப்பு கொடுத்துள்ளது .மேலும் அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் ஜிம்பாப்வே அணி வென்று அசத்தியிருக்கிறது.

காரணம்
இதனால் ஜிம்பாப்வே அணி எதிர்பார்த்ததை விட பலமாக விளங்குவதால் இந்திய அணையையும் பலப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஷிகர் தவானை தவிர மற்ற வீரர்கள் அவ்வளவு அனுபவம் இல்லை. இதனால் இந்திய அணிக்கு சரிவு ஏற்படும் என கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரித்தனர். இதனை அடுத்து அணியை பலப்படுத்தும் முயற்சியாக கேஎல் ராகுலுக்கு ஜிம்பாப்வே தொடரில் அவசர அவசரமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,


Click it and Unblock the Notifications