For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேதனையிலும் ஷிகர் தவான் செய்த சாதனை!

டெல்லி: உலகக் கோப்பையை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி தோல்வியில் முடிந்த போதிலும் இந்தியா சந்தோஷப்பட்டுக் கொள்ள இந்த உலகக் கோப்பைத் தொடரில் பல விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று ஷிகர் தவானின் அருமையான பேட்டிங்.

சுற்றுப் போட்டிகளிலும், காலிறுதிப் போட்டியிலும் இந்தியா விளையாடி விதம் நீண்ட காலத்திற்கு மறக்க முடியாத ஒன்றாக நிச்சயம் திகழும். ஆஸ்திரேலியாவிடம் வந்து நமது கனவுகள் சின்னாபின்னமானது மட்டுமே இந்த உலகக் கோப்பைத் தொடரில் நம்மால் மறக்க முடியாத வேதனையாகும்.

மறுபக்கம் டோணி தலைமையிலான இந்திய அணி பல சந்தோஷங்களை நமக்குக் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. ஷிகர் தவானின் ரன் குவிப்பு அதில் ஒன்று.

400 ரன்களுக்கு மேல் குவித்த தவான்

400 ரன்களுக்கு மேல் குவித்த தவான்

ஷிகர் தவான் இந்தத் தொடரில் 449 ரன்களைக் குவித்தார். ஒரு உலகக் கோப்பைத் தொடரில் 400 ரன்களுக்கு மேல் குவித்த நான்காவது இந்தியர் தவான்.

முன்னோடிகள் மூவர்

முன்னோடிகள் மூவர்

இவருக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட் ஆகியோர் 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.

99ல் கலக்கிய கங்குலி, டிராவிட்

99ல் கலக்கிய கங்குலி, டிராவிட்

இதில் கங்குலியும், டிராவிடும் 1999ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் பிரமாதமாக ஆடிக் கலக்கினர்.

3 முறை குவித்த சச்சின்

3 முறை குவித்த சச்சின்

மறுபக்கம் சச்சின் 1996, 2003 மற்றும் 2011 ஆகிய மூன்று தொடர்களில் தலா 400க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து அசத்திய சாதனையாளர் ஆவார்.

3 போட்டிகளில் முத்திரை பதித்த தவான்

3 போட்டிகளில் முத்திரை பதித்த தவான்

இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஷிகர் தவான், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடினார்.

அரை இறுதியிலும் அசத்த முயற்சி

அரை இறுதியிலும் அசத்த முயற்சி

நேற்றைய அரை இறுதிப் போட்டியிலும் கூட அசத்தலாகத்தான் அடித்து ஆடினார் தவான். ஆனால் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லாமல் போய் விட்டது. சிறப்பாக ஆடி வந்த அவர் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் மட்டும் நின்றிருந்தால் போட்டியின் போக்கு மாறியிருக்கக் கூடும்.

Story first published: Friday, March 27, 2015, 8:09 [IST]
Other articles published on Mar 27, 2015
English summary
India's sensational run at the ICC Cricket World Cup 2015 came to a grinding halt against co-hosts Australia at the Sydney Cricket Ground. Billions of fans around the world and the MS Dhoni's brigade would be undoubtedly gutted but Shikhar Dhawan would probably feel the hurt more than the others. The left-handed opener from Delhi became only the fourth Indian to score over 400 runs in a single World Cup. He finished with 449 runs.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+