
இந்தியாவின் தடுமாற்றம்
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 7 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதன்பின்னர் வந்த சுப்மன் கில் 43 (49), ஷ்ரேயஸ் ஐயர் 63 (71), சஞ்சு சாம்சன் 54 (51), தீபக் ஹூடா 33 (36) என சிறப்பாக விளையாடிய போதும், ஆட்டத்தை முடித்துக்கொடுக்காமலேயே வெளியேறிவிட்டனர்.

அக்ஷர் பட்டேல் அதிரடி
இதனால் கடைசி 74 பந்துகளில் 114 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. அப்போது களமிறங்கிய அக்ஷர் பட்டேல், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தார். 35 பந்துகளை சந்தித்த அவர், 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 64 ரன்களை குவித்தார். குறிப்பாக இந்திய அணிக்கு கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது, ஒரே ஒரு சிக்ஸரை நேரடியாக பறக்கவிட்டு அசத்தினார். அவருக்கு உறுதுணையாக ஆடிய ஆவேஷ் கான் கடைசி நேரத்தில் 10 ரன்கள் அடித்தார்.

தவானின் பேச்சு
இந்நிலையில் இதுகுறித்து பேசிய கேப்டன் ஷிகர் தவான், ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். இலக்கு பெரிதாக இருந்த போதும் இந்திய வீரர்கள் நம்பிக்கையை கைவிடவில்லை. சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் பேட்டிங்கில் வியக்கவைத்தனர். குறிப்பாக ஆவேஷ் கான் தனது அறிமுக போட்டியிலேயே அழுத்தத்திலும் முக்கியமான 10 ரன்களை அடித்துக்கொடுத்தார். இதற்கெல்லாம் ஐபிஎல் தொடருக்கு தான் நன்றி கூற வேண்டும்.

நிதான தொடக்கம்
முதலில் நாங்கள் நிதானமாக தான் தொடங்கினோம். அதிக வேகம் தேவைப்பட்டது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் - சஞ்சு சாம்சனின் பார்ட்னர்ஷிப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. சிறப்பான வெற்றியை தேடிக்கொடுத்த வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் நன்றி. இதிலிருந்தும் வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இனியும் கற்றுக்கொள்வோம் என ஷிகர் தவான் கூறினார்.


Click it and Unblock the Notifications











