Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே கேட்சால் சதம் மிஸ்.. ஷிகர் தவான் அபார ஆட்டம்.. இந்திய அணி 308 ரன்கள் குவிப்பு

போர்ட் ஆப் ஸ்பெயின் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் மூன்று ரன்களில் சதத்தை தவறவிட்டார்.

Recommended Video

IND vs WI கேப்டன் Shikhar Dhawan 97 ரன்கள் எடுத்து அபாரம் *Cricket

நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி இந்த தொடரில் தவான் தலைமையில் களம் இறங்கியது .

போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ததால் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

டாஸ் வீசும் போது கூட மேகமூட்டம் இருந்ததால் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரான் பந்துவீச்சை தேர்வு செய்தார் ஆனால் இந்திய அணி பேட்டிங் செய்ய வந்தபோது வெயில் சுட்டெரித்தது. இதனால் ஆடுகளம் ரன்கூவிப்புக்கு சாதகமாக மாறியது. இதனை பயன்படுத்திக் கொண்ட இளம் வீரர் சுப்மான் கில் மற்றும் ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.

அடுத்தடுத்து அரைசதம்

அடுத்தடுத்து அரைசதம்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஒரு நாள் அணிக்கு திரும்பிய சுப்மான் கில் 36 பந்துகளில் அரை சதம் அடித்தார். மறுமுனையில் ஷிகர் தவானும் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தவான் 53 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். இதில் எட்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

ரன்அவுட்

ரன்அவுட்

நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சுப்மான் கில் 64 ரன்களில் கவனக்குறைவால் ரன் அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 119 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் களத்துக்கு வந்து அவரும் அதிரடி காட்டினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

ரன்குவிப்பு

ரன்குவிப்பு

சதத்தை நெருங்கி கொண்டிருந்த ஷிகர் தவான் பவுண்டரி அடிக்க முயற்சி செய்தார். ஆனால் புருக்ஸ், பாய்ந்து கேட்ச் பிடித்து தவானை 97 ரன்களில் ஆட்டம் இழக்க வைத்தார்.மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களில் ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் 13 ரன்களில் உசேன் பந்தில் போல்ட் ஆகினார். தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் 12 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.தீபக் ஹூடா 27 ரன்களும், அக்சர் 21 ரன்களும் எடுக்க, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Saturday, July 23, 2022, 16:15 [IST]
Other articles published on Jul 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+