Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"காதல் கண்ணை மறைத்துவிட்டது" - மனைவியை பிரிந்தது எதனால்? இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய ஷிகர் தவான்

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஷிகர் தவான் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரும் பின்னடவை சந்தித்து வருகிறார்.ஷிகர் தவான் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

ஆயிஷா முகர்ஜி தவானை விட 12 வயது மூத்தவர். அவருக்கு ஏற்கனவே முதல் திருமணத்தின் மூலம் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன.

இந்த நிலையில் ஷிகர் தவான் ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்து ஜோராவர் என்ற மகனையும் 2014 ஆம் ஆண்டு பெற்றார்.

தோல்வியை தழுவி விட்டேன்

தோல்வியை தழுவி விட்டேன்

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஷிகர் தவானுக்கும் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜிக்கும் பிரிவு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். தன் மனைவியை பிரிந்தது ஏனென்று ஷிகர் தவான் கூறியிருக்கிறார். அதில், " இந்த விஷயத்தில் நான் தோல்வியை தழுவி விட்டேன். ஏனென்றால் இறுதி முடிவு எடுப்பது அந்தந்த மனிதர்களின் கையில் இருக்கிறது.

அனுபவம் இல்லை

அனுபவம் இல்லை

நான் யார் மீதும் கைகாட்டி குற்றம் சொல்ல விரும்பவில்லை. எனக்கு திருமணம் உறவு பற்றி எதுவும் தெரியாது. இதனால் நான் அதில் தோல்வியை அடைந்து விட்டேன். இன்று நான் கிரிக்கெட் குறித்து நிறைய பேசலாம். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒன்றும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. எல்லாம் அனுபவத்தின் மூலம் தான் கிடைக்கும்.தற்போது முதல் திருமணம் மூலம் எனக்கு நல்லது எது கெட்டது என்பது பற்றி புரிந்து கொண்டேன்.

 குறை தெரியாது

குறை தெரியாது

நாளை மறுமணம் செய்து கொள்வீர்களா என கேட்டால் எனக்கு ஏற்ற பெண் கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். நான் 26 , 27 வயதில் இருந்தபோது தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தேன். இதனால் யாருடனும் எந்த உறவையும் வைத்துக் கொண்டதில்லை. ஆனால் மகிழ்ச்சியாக இருப்பேன். முதன் முதலில் நான் காதலில் விழுந்த போது எனக்கு எந்த குறையும் தெரியவில்லை.

 இளைஞர்களுக்கு அறிவுரை

இளைஞர்களுக்கு அறிவுரை

ஆனால் இன்று நான் காதலில் விழுந்தால் என்ன பிரச்சனை வரும் எந்த குறை வரும் என்பது குறித்து எல்லாம் எனக்கு தெரிய வரும். இளைஞர்கள் திருமண உறவுக்கு செல்லும் முன்பு அது பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். திருமணம் தொடர்பாக அவசரத்திலும் உணர்ச்சிபூர்வமாக இருக்கும்போதும் எந்த முடிவும் எடுக்கக் கூடாது .முதலில் அந்த பெண்ணுடன் இரண்டு ஆண்டுகள் பொழுதை களியுங்கள். அதன் பிறகு உங்களுடைய கலாச்சாரத்திற்கும் உங்களுக்கும் ஏற்ற வகையில் இருந்தார் என்றால் நீங்கள் அந்த பந்தத்தை தொடருங்கள் என்று ஷிகர் தவான் அறிவுரை வழங்கியுள்ளார்.

Story first published: Sunday, March 26, 2023, 17:16 [IST]
Other articles published on Mar 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+