Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சினிமாவில் என்ட்ரி தரும் ஷிகர் தவான்.. 2 முன்னணி ஹீரோயின்கள்.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

மும்பை: ஷிகர் தவான் நடித்துள்ள முதல் திரைப்படத்தின் புகைப்படங்கள் மற்றும் அப்டேட் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர பேட்ஸ்மேனாக வலம் வருபவர் சீனியர் வீரர் ஷிகர் தவான்.

இவரின் தலைமையில் தான் தற்போது இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதி வருகிறது.

தவானின் அடுத்த திட்டம்

தவானின் அடுத்த திட்டம்

இந்திய அணியில் ஷிகர் தவான் இடம்பெற்றால், ஆட்டத்தை தாண்டி ரசிகர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கும் என்றே கூறலாம். ஏனென்றால் கேட்ச் பிடித்தாலும் சரி, வெற்றி பெற்றாலும் சரி அவர் செய்யும் விஷயங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். இந்நிலையில் ரசிகர்களுக்காக தனது அடுத்தகட்ட பணியில் களமிறங்கியுள்ளார் ஷிகர் தவான்.

 திரைப்பட என்ட்ரி

திரைப்பட என்ட்ரி

கிரிக்கெட்டை தொடர்ந்து திரைப்பட துறையிலும் தவான் கால்பதித்துள்ளார். பாலிவுட்டில் உருவாகி வரும் Double XL ( டபுள் எக்ஸல் ) என்ற திரைப்படத்தில் தான் அவர் அறிமுகமாகிறார். முன்னணி நாயகிகளான ஹூமா குரேஷி மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக இந்த படத்தில் நடிக்கின்றனர்.

கலக்கல் புகைப்படம்

கலக்கல் புகைப்படம்

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் தவான் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. கோட் சூட் அணிந்துக்கொண்டு அட்டகாசமான லுக்கில் உள்ள தவான், ஹுமா குரேஷியின் கையை பிடித்துக்கொண்டு ஏதோ பார்ட்டியில் நடனம் ஆடுவது போன்று இடம்பெற்றுள்ளது.

வெளியீடு எப்போது

வெளியீடு எப்போது

அதிக உடல் எடையை கொண்ட இரு பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு தான் இந்த Double XL திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதியன்று நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, October 11, 2022, 18:32 [IST]
Other articles published on Oct 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+