டி20 தொடர்: என் தப்பு தான், திருத்திக்கிறேன்- ஷிகர் தவானின் உருக்கமான ட்வீட்
மும்பை: டி20 உலகக் கோப்பை தொடரில் மோசமாக விளையாடியது குறித்து கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்விட்டரில் உருக்கமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியோடு வெளியேறியது. உலகக் கோப்பையை மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. டி20 உலகக் கோப்பை தொடரில் ஷிகர் தவான் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.
அவர் மொத்தம் 4 போட்டிகளில் விளையாடினார். அதில் 1, 6, 23 மற்றும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். அரையிறுதிப் போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருக்கு பதில் அரையிறுதிப் போட்டியில் ரஹானே ஆடினார்.

இந்நிலையில் ஷிகர் தவான் ட்விட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது,
என் தவறு தான். நான் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை. என் தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பாக விளையாட நிச்சயம் முயற்சிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
Story first published: Tuesday, April 5, 2016, 11:33 [IST]
Other articles published on Apr 5, 2016


Click it and Unblock the Notifications