Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார் ஷிகர் தவான்!! பறிப்போன இளம் வீரரின் வாய்ப்பு? IND vs SA ODI

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.

இந்த தொடர் முடிந்தவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

இந்த தொடரில் கே.எல்.ராகுல் கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் தேர்வாகியுள்ளனர்.

டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை

இந்த தொடரில் யாரும் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் அணிக்கு திரும்பியுள்ளார். ஷிகர் தவானை கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் சேர்க்காமல் தேர்வுக்குழுவினர் இருந்தனர். டி20 உலகக் கோப்பையில் கூட தவான் இந்திய அணியில் தேர்வாகவில்லை

6 மாதம் காத்திருப்பு

6 மாதம் காத்திருப்பு

இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது, இதனால் , அனுபவ வீரரின் பங்கு தேவை என்பதால் தவான் அணிக்கு திரும்பியுள்ளார். தவான் கடைசியாக 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். அதன் பிறகு விவகாரத்து, அணியிலிருந்து நீக்கம் என பல்வேற சரிவுகளை கண்ட தவான், தற்போது அணிக்கு திரும்பியுள்ளார்

தெ.ஆப்பிரிக்க மண்ணில் தவான்

தெ.ஆப்பிரிக்க மண்ணில் தவான்

36 வயதான தவான் சர்வதேச ஒருநாள் போட்டியில் 6105 ரன்களை எடுத்துள்ளார்.தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை 9 போட்டியில் விளையாடியுள்ள தவான்,335 ரன்களை விளாசியுள்ளார். இதில் ஒரு சதம் அடங்கும். சராசரி 47 ரன்கள். இந்த நிலையில் ஷிகர் தவானின் வருகையால் இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு பிளேயிங் 11இல் வாய்ப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது

ருத்துராஜ்க்கு கிடைக்குமா வாய்ப்பு?

ருத்துராஜ்க்கு கிடைக்குமா வாய்ப்பு?

விஜய் ஹசாரே கோப்பையில் ருத்துராஜ் கெய்க்வாட் 4 சதம் விளாசியுள்ளார். ஆனால் ஷிகர் தவான் 20 ரன்களை கூட தொடவில்லை. 0,12,14,18,12 இது தான் ஷிகர் தவான் எடுத்த ரன்கள். நிலைமை இப்படி இருக்க அவர் திடீர் என்று அணியில் தேர்வாகி உள்ளார். தொடக்க வீரராக கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் இருப்பதால் நல்ல ரன் குவித்த ருத்துராஜ்க்கு வாய்ப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, December 31, 2021, 21:46 [IST]
Other articles published on Dec 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+