Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்மணியே காதல் என்பது... மனைவியுடன ரொமாண்டிக் புகைப்படம் வெளியிட்ட தவான்

டெல்லி : தன்னுடைய காதல் மனைவியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய வீரர் ஷிகர் தவான் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பரபரப்புடன் செயல்பட்டுவரும் ஷிகர் தவானின் இந்த புகைப்படம் வெளியிட்ட ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றது.

முன்னதாக தன்னுடைய மகன் சூப்பர் ஹீரோ உடையுடன் சப்பாத்தி சுட்ட வீடியோவையும் ஷிகர் தவான் வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் பரபர

சமூக வலைதளங்களில் பரபர

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு சமயத்தில் தன்னுடைய சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். இவர் வெளியிடும் தொடர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் அதிகபட்ச ஆதரவை பெற்று விடுகிறது.

காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல்

காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல்

திட்டமிட்டபடி மார்ச் 29ம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவங்கியிருந்தால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஷிகர் தவான் விளையாடியிருந்திருப்பார். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் 15ம் தேதிவரை தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஹீரோக்களின் சமையல்

சமூக வலைதளங்களில் பரபரப்புடன் காணப்படும் ஷிகர் தவான், கடந்த மாதத்தில் தான், இரண்டு நாய்க்குட்டிகளை வளர்க்கவுள்ளதாக அறிவித்திருந்தார். தனது வீட்டின் புதிய உறுப்பினர்கள் என்றும் அவற்றை அறிமுகப்படுத்தியிருந்தார். இதனிடையே, இன்று காலை தன்னுடைய மகன் சரோவர், சூப்பர் ஹீரோ உடையுடன் சப்பாத்தி சுடும் வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

காதல் குறித்த விளக்கம்

காதல் குறித்த விளக்கம்

இந்நிலையில், தான் தன்னுடைய மனைவி ஆயிஷா தவானுடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் தவான். அதற்கு பிரபல வாசகம் ஒன்றையும் கேப்ஷனாக பதிவிட்டுள்ளார். காதல் என்பது ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல ஆனால் ஒரேதிசையில் ஒருமித்த கருத்துடன் பார்ப்பதே காதல் என்னும்படியான வாசகத்தை அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரெய்னா, பதான், சஹல் மற்றும் ராகுல் கமெண்ட் மற்றும் லைக்குகளை அளித்துள்ளனர்.

Story first published: Sunday, July 12, 2020, 18:53 [IST]
Other articles published on Jul 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+