Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் ODI-ல் மிக மோசம்.. 3வது போட்டியில் அட்டகாசம்.. இந்தியாவின் கம்பேக் எப்படி?.. தவான் விளக்கம்!

டெல்லி: தென்னாப்பிரிக்க அணியுடனான தொடரை வென்றது குறித்து இந்திய கேப்டன் ஷிகர் தவான் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

3வது ஒருநாள் போட்டி

3வது ஒருநாள் போட்டி

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 27.1 ஓவர்களில் அந்த அணி 99 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 105 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

அட்டகாச கம்பேக்

அட்டகாச கம்பேக்

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங், பவுலிங், பேட்டிங் என மூன்றிலுமே படு மோசமாக செயல்பட்டது. சஞ்சு சாம்சனின் போராட்டத்தால் இந்தியா மோசமான தோல்வியில் இருந்து தப்பியது. ஆனால் அடுத்த 2 போட்டிகளிலுமே அட்டகாசமான கம்பேக் கொடுத்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியுள்ளது.

ஷிகர் தவான் விளக்கம்

ஷிகர் தவான் விளக்கம்

இந்நிலையில் இந்த கம்பேக் குறித்து தவான் விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்திய வீரர்களை நினைத்தால் பெருமையாக உள்ளது. அவர்கள் பொறுப்பை உணர்ந்துக்கொண்டு பக்குவமாக செயல்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. முதல் போட்டியில் நாங்கள் பல தவறுகளை செய்தோம். நிறைய கேட்ச்-களை தவறவிட்டோம். ஆனால் அடுத்த 2 போட்டிகளில் சிறப்பாக கம்பேக் கொடுப்பதற்கு பயிற்சியாளர்கள் தான் காரணம்.

காரணம் என்ன

காரணம் என்ன

எங்களின் மீது எந்தவித அழுத்தமும் வராத அளவிற்கு பார்த்துக்கொண்டனர். எங்களின் திட்டத்தில் இருந்து கவனம் சிதறாமல் தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக விளையாடினோம். அதன் விளைவாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டோம் என ஷிகர் தவான் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 11, 2022, 20:00 [IST]
Other articles published on Oct 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+