Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன புவனேஷ்வர்குமாருக்கு கல்யாணமா.. சரி வாங்க கலாய்ப்போம்.. காமெடி செய்த ஷிகர் தவான்

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்குமார் தனது தோழியை நவம்பர் 23ம் தேதி திருமணம் செய்கிறார். இந்த திருமணம் டெல்லியில் மிகவும் கோலாகலமாக நடக்க இருக்கிறது .

இந்த நிலையில் இந்திய வீரர் ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புவனேஷ்வர்குமாரை கலாய்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரிடம் நிறைய கேள்விகளை கேட்டு இருக்கிறார்.

மேலும் அந்த வீடியோவில் புவனேஷ்வர்குமாரும் இடம்பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தவான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் புவனேஷ்வர்குமார் நிதானமாக பதில் அளித்தார்.

புவனேஷ்வர் குமாருக்கு கல்யாணம்

புவனேஷ்வர் குமாருக்கு கல்யாணம்

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர்குமாருக்கும் நுபுர் நாகர் என்ற பெண்ணுக்கும் கடந்த அக்டாபர் 1ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் பல நாட்களாக நண்பர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலநாட்களுக்கு முன் இவர்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து அவர் அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இந்த நிலையில் இவர்கள் திருமணம் வரும் நவம்பர் 23ம் தேதி நடக்க உள்ளது.

கேள்விகளை தொடுத்த தவான்

ஸ்விங் பாலில் கலக்கும் புவனேஷ்வர்குமாருக்கு இன்ஸ்டாகிராமில் தவான் நிறைய ஸ்விங் கேள்விகளை கேட்டார். அதில் முக்கியமாக ''நம்ம டீம்ல இப்ப உங்களுக்கு கல்யாணம். இது பற்றி எப்படி பீல் பண்ணுறீங்க. உங்க கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க'' என்று கேட்டு இருந்தார். அதே வீடியோவில் தவானுக்கு அருகில் புவனேஷ்வர் குமாரும் உட்கார்ந்து இருந்தார்.

அதை நீங்கதான் சொல்லணும்

அதை நீங்கதான் சொல்லணும்

தவான் சிரித்துக் கொண்டே கேட்ட இந்த கேள்வியை புவனேஸ்வர்குமார் அசால்டாக எதிர்கொண்டார். அதில் ''எனக்கு இது பத்தி ஒண்ணுமே தெரியாது. ஏற்கனவே கல்யாணம் ஆனா நீங்கதான் எனக்கு கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்லணும்'' என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். இதற்கு தவான் பதில் சொல்லாமல் முழித்துக் கொண்டு இருந்தார்.

மகிழ்ச்சியின் உச்சத்தில் புவி

மகிழ்ச்சியின் உச்சத்தில் புவி

அந்த வீடியோவிலேயே புவனேஷ்வர்குமார் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் டெல்லியில் நடக்கும் அவர்கள் திருமணத்தில் இந்திய, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. இதற்காக புவனேஷ்வர்குமார் இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு கேட்டு உள்ளார்.

Story first published: Tuesday, November 21, 2017, 17:54 [IST]
Other articles published on Nov 21, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+