Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னம்மா பண்ணி வச்சிருக்கீங்க.. ஷிகர் தவானை.. இப்படியா பண்ணுவீங்க!

டெல்லி: எங்கு பார்த்தாலும் ஒர்க் பிரம் ஹோம் அக்கப்போர்தான் ஓடிக் கொண்டுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த டிவீட்டில் நாம் பார்ப்பது.

கொரோனாவைரஸ் வந்து உலகையே முடக்கி விட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகள் ரத்தாகி விட்டன. ஒலிம்பிக் போட்டியையே கொண்டு போய் ஒரு வருடத்திற்குத் தள்ளிப் போட்டு விட்டனர்.

வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி ஆகி விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் என்னென்னவோ செய்து கொண்டுள்ளனர். அதில் ஒன்றுதான் இந்த துணி துவைக்கும் படலம்.

ஷிகர் தவான் போட்ட வீடியோ

ஷிகர் தவான் போட்ட வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் ஷிகர் தவான். தொடக்க ஆட்டக்காரராக அதிரடி காட்டும் ஷிகர் தவான் போட்டுள்ள இந்த வீடியோவில் அப்படியே தலைகீழாக உள்ளது காட்சி. அதாங்க துணி துவைப்பவராக "நடித்துள்ளார்" தவான். ஆம் ஒரு டிக்டாக் வீடியோவை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் ஷிகர் தவான்.

துணியைக் கும்மும் ஷிகர் தவான்

துணியைக் கும்மும் ஷிகர் தவான்

அந்த வீடியோவில் பாத்ரூமில் ஷிகர் தவான் பாத் டப்பில் அமர்ந்திருக்கிறார். வாளியில் துணியைப் போட்டு கும்மிக் கொண்டுள்ளார். பக்கத்தில் அவரது மனைவி நின்று ஜாலியாக மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார். அத்தோடு முடிந்ததா சீன்.. இல்லையே.. அப்படியே கையில் குச்சியைக் கொடுத்து டாய்லெட்டை சுத்தம் செய்யச் சொல்கிறாராம் மனைவி.

அந்த டாய்லெட்டை சுத்தம் பண்ணுங்க

அந்த டாய்லெட்டை சுத்தம் பண்ணுங்க

தவானும் தலையில் அடித்துக் கொண்டபடி டாய்லெட்டை குத்தி சுத்தம் செய்கிறார். மனைவி ஜாலியாக போனில் பேசிக் கொண்டிருக்கிறாராம். இதில் மெசேஜ் என்னவென்றால் ஆண்கள் எல்லாம் கஷ்டப்பட்டு வீட்டு வேலை செய்கிறார்களாம். மனைவிமார்கள் எல்லாம் ஹாயாக இருக்கிறார்களாம்.. என்னங்க சார் இது.. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலை?

சுத்தம் பண்ணட்டுமே என்ன கெட்டுச்சு

சுத்தம் பண்ணட்டுமே என்ன கெட்டுச்சு

உண்மையில் இதில் நல்ல மெசேஜு அடங்கியிருக்கு. அதாவது வீட்டில் பெண்களுக்கு துணையாக ஆண்களும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும், உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நல்ல அனுபவத்தை இந்த லாக் டவுனும், ஒர்க் பிரம் ஹோமும் போதித்திருப்பதாக பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளலாம் இல்லையா. இப்போதாவது ஆண்கள், பெண்களுக்கு உதவட்டுமே.. என்ன கெட்டுப் போச்சு.

நல்லா பொழுது போகுது போல

நல்லா பொழுது போகுது போல

எப்படியோ பொழுது நல்லா போனாப் போதும். இப்போதைக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஐபிஎல் போட்டிகள் நடப்பதாக தெரியவில்லை. வேறு கிரிக்கெட் போட்டிகளும் கிடையாது. மேஜர் போட்டிகளையும் தூக்கித் தூரப் போட்டு விட்டனர். 21 நாட்களுக்கு வேறு வெளியில் வர முடியாது. எனவே மனைவிக்கு துணி துவைப்பது, சமையல் வேலையில் உதவுவது என ஜாலியாக பொழுதை கழிக்க வேண்டியதுதான்.. நல்லாதானே இருக்கு இதுவும்.

Story first published: Wednesday, March 25, 2020, 23:23 [IST]
Other articles published on Mar 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+